ஐதராபாத் நிஜாமின் கடைசி மகள் 93 வயதில் காலமானார்

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில செய்திகள் மற்றும் கட்டுரைகளை தொகுத்துள்ளோம்.

தினமலர்: ஐதராபாத் நிஜாமின் கடைசி மகள் வயது மூப்பு காரணமாக காலமானார்

ஐதராபாத் நிஜாமின் கடைசி மகள் வயது மூப்பு காரணமாக காலமானார்

பட மூலாதாரம், DINAMALAR

ஐதராபாத்தின் ஏழாவது நிஜாம் நவாப் மிர் ஒஸ்மான் அலிகான் பகதூர். இவருக்கு 18 மகன்களும் 16 மகள்களும் இருந்தனர். நிஜாமின் மனைவிகளில் ஒருவரான கதேரா பேகம் சாஹோபாவின் மகளான சஹோப்ஸாதி பஷீர் உன்னிசா பேகம் (93) வயது மூப்பு காரணமாக காலமானார் என்கிறது தினமலர் நாளிதழ் செய்தி

1927 ம் ஆண்டில் பிறந்த உன்னிசா பேகம் காசிம் நாவஸ் ஜங்அலிபாஷா என்பவரை மணந்தார். இவர் கடந்த 1998-ம் ஆண்டு காலமானார். இவர்களது ஒரே மகள் சாஹே ப்ஸாதி ரஷீத் உன்னிசா பேகம், நிஜாம் அருங்காட்சிய வளாகத்தில் குடியிருந்து வருகிறார்.

சஹோப்ஸாதி பஷீர் உன்னிசா பேகம் மறைவு குறித்து நிஜாமின் பேரன்களில் ஒருவரும், நிஜாம் குடும்ப நல சங்கத்தின் தலைவருமான நவாப் ஜவாப் அலிகான், தனது அத்தையை பற்றி கூறுகையில், குடும்பத்தில் அனைவரின் நலன்களை பற்றி அக்கறை கொண்டிருந்தார். அரச வாழ்வில் இருந்து சாதாரண வாழ்க்கைக்கு மாறும் போதும், முந்தைய மற்றும் இளைய தலைமுறையினருடன் பழகுவதில் தன்னை ஒன்றினைத்து கொண்டார். என நினைவு கூர்ந்தார்.

நிஜாமின் கடைசி மகன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2018 ம் ஆண்டில் காலமானார்.

தினமணி: நடிகர் சூர்யாவின் படங்களுக்குத் தடை விதித்துள்ளதா திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்?

நடிகர் சூர்யா

பட மூலாதாரம், LYCA

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை அமேசான் பிரைம் தளத்தில் நேரடியாக வெளியிட்டார் அதன் தயாரிப்பாளர் சூர்யா. எனினும் பெரிய நிறுவனம் தயாரிப்பில் பெரிய நடிகை நடித்த படமொன்று அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாவதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தமிழ்த் திரையுலகில் இது தவறான முன்னுதாரணமாக அமையும், இதனால் திரையரங்குகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து கடந்த ஏப்ரல் மாதம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வம் வெளியிட்ட விடியோவில் கூறியதாவது:

பொன்மகள் வந்தாள் படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. இது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. திரையரங்குகளுக்காகத் தயாரிக்கப்பட்ட படங்கள், திரையரங்குகளில் வெளியான பிறகுதான் மற்ற ஊடகங்களில் வெளியாகவேண்டும் என்பது விதி. அதை மீறி படத்தின் தயாரிப்பாளர் ஓடிடி தளத்துக்குக் கொடுத்துவிட்டார். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு இதைச் செய்யவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர் கேட்கவில்லை. எங்கள் கோரிக்கையை மீறி அவர் படத்தை ஓடிடி தளத்தில் திரையிடும் பட்சத்தில் அந்தத் தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பாளருடன் தொடர்புடைய எந்த நிறுவனங்களின் படங்களையும் நேரடியாக ஓடிடி தளத்திலேயே வெளியிடவேண்டும் என்று கூறியுள்ளோம். அந்தத் திரைப்படங்கள் எங்கள் திரையரங்குகளுக்குத் தேவையில்லை என்பது அனைத்து திரையரங்கு உரிமையாளர்களின் விருப்பம். இதுதான் எங்களின் முடிவு என்று கூறினார்.

தற்போது இந்தப் பிரச்னை மீண்டும் தலைதூக்கியுள்ளது. சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தாங்கள் நடிக்கும் படங்களை நேரடியாக ஓடிடி தளங்களிலேயே வெளியிட்டுக் கொள்ளலாம் என பன்னீர் செல்வம் மீண்டும் தனது கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது: திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தான் சூர்யா படத்தைத் திரையிடுவது குறித்து முடிவெடுக்க முடியும். பன்னீர் செல்வம் தன்னுடைய சொந்தக் கருத்தைக் கூறியுள்ளார். மற்றபடி சூர்யா படங்களுக்குத் தடை எதுவும் தற்போது விதிக்கப்படவில்லை என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என விவரிக்கிறது அச்செய்தி.

தி இந்து: அயோத்தியில் மசூதி அமைக்க ஆணையம்

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் மசூதி அமைப்பது தொடர்பான ஆணையத்தில் 15 பேர் இடம்பெறுவார்கள் என உத்தரப்பிரதேச சுன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இண்டோ இஸ்லாமிக் கல்சுரல் ஃபவுண்டேஷன் என இந்த ஆணையத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதாக உபி சுன்னி வக்பு வாரியத் தலைவர் சுஃபர் ஃபருகி தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இருந்த இடத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனிப்பூர் என்ற கிராமத்தில் புதிய மசூதி கட்ட அரசு ஒதுக்கிய 5 ஏக்கர் நிலத்தை ஒப்புக்கொள்ள கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வக்பு வாரியம் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: