கொரோனா வைரஸ்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனிமைப்படுத்திக்கொண்டார்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதால் தமிழக ஆளுநர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளுநர் மாளிகையில் உள்ள ஊழியர்கள் 38 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சுகாதாரத் துறையால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

இதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு மருத்துவர்கள் மேற்கொண்ட வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் அவர் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது. இருந்தபோதும் அவர் தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து ஆளுநர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டதாக ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

நிலைமையை தீவிரமாகக் கவனித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :