முகேஷ் அம்பானி: ஜியோவில் முதலீடு செய்யும் கூகுள் - உலக பணக்காரர்கள் பட்டியலில் விறுவிறுவென முன்னேறுகிறார்

பட மூலாதாரம், Getty Images
கூகுள் நிறுவனம் ஜியோ நிறுவனத்தில் ரூபாய் 33,737 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.
ஜியோ - கூகுள் கூட்டு
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43வது வருடாந்திர கூட்டம் நடைபெறுகிறது. முதல்முதலாக இந்த கூட்டம் மெய்நிகர் கூட்டமாக நடக்கிறது.
இந்த கூட்டத்தில் முகேஷ் அம்பானி கூகுள் நிறுவனத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.
ஜியோ நிறுவனத்தின் 7.7% பங்குகளை ரூ.33, 737 கோடி முதலீடு செய்து கூகுள் நிறுவனம் வாங்குகிறது என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இதன் மூலம், ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்தது மூன்று மாத காலத்துக்குள் ரூ.2,12,809 கோடி நிதி திரட்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டு, அதாவது ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42வது வருடாந்திர கூட்டத்தில் செளதியின் அரம்கோ நிறுவனம் ஜியோவில் முதலீடு செய்யும் அறிவிப்பை முகேஷ் அம்பானி வெளியிட்டார்.
பணக்காரர்கள் பட்டியல்
உலக பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க், கூகுள் நிறுவனர் செர்கி பிரின், லாரி பேஜ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார்.
கடந்த வாரம் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பை விட, முகேஷ் அம்பானியின் சொத்து அதிகரித்து அவரை பின்னுக்குத் தள்ளி முன்னேறினார்.
முகேஷ் அம்பானியின் சொத்து கடந்த வாரத்தில் 7,240 கோடி டாலரானது.
இந்த நிலையில் இப்போது உலகின் பணக்காரர்கள் வரிசையில் 6-வது இடத்துக்கு முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார் என்கிறது உலக பணக்காரர்கள் குறித்த நேற்றைய ப்ளூம்பெர்க் அறிக்கை.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












