பாபா ராம்தேவ்: பதஞ்சலியின் கொரோனில், சுவாசரி மருந்துகள் - அடுக்கடுக்காக எழும் கேள்விகள்? - பிபிசி சிறப்பு கட்டுரை

கொரொனில்: யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் கொரொனா மருந்தின் உண்மை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நிதின் ஸ்ரீவாஸ்தவா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கோவிட்-19 தொற்று நோய் உலகையே அச்சுறுத்தி வரும் வேளையில், பரிசோதிக்கப்பட்ட உறுதியான ஒரு தடுப்பு மருந்து அல்லது கொரொனா தொற்றைக் குணப்படுத்தும் மருந்துதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் இதற்கான மருந்து அல்லது தடுப்பு மருந்தை உருவாக்கப் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் 'கொரொனாவை குணப்படுத்தும் மருந்து' என்ற அறிவிப்பு வந்தது. அதனை இந்திய அரசு கிடப்பில் போட்டது. இப்போது இந்த விவகாரம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பதஞ்சலி குழுமத்தின் மீது மருந்தின் பேரில் மோசடி செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மருத்துவப் பரிசோதனை எப்படி நடக்கிறது?

இந்த விவகாரம் குறித்து மேலும் அறியும் முன், இந்தியாவில் எந்த ஒரு மருந்துக்கும் பரிசோதனை என்பது எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்று அறிந்து கொள்வது அவசியமாகிறது.

முதலில் டிஜிசிஐ எனப்படும் டிரக் கன்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் இந்தியாவின் அனுமதி பெறவேண்டும்.

அதன் பிறகு, சோதனை மேற்கொள்ளப்படும் அனைத்து அமைப்புகளின் நெறிமுறைகள் குழுவின் அனுமதி பெறவேண்டும்.

அதன் பிறகு, இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம், ஐ சி எம் ஆர்-ன் மேற்பார்வையில் இயங்கும் இந்திய மருத்துவ சோதனை பதிவேடு, சி டி ஆர் ஐ என்ற இணைய தளத்தில், சோதனையுடன் தொடர்புடைய நடைமுறைகள், வளங்கள், பெயர், நிதியாதாரம் குறித்த அனைத்தும் பரிசோதனை மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு வழங்கப்படும் .

கொரொனில்: யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் கொரொனா மருந்தின் உண்மை

பட மூலாதாரம், Getty Images

சி.டி.ஆர்.ஐ இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்ட படிவத்தின் நகல் (சி.டி.ஆர்.ஐ / 2020/05/025273) பிபிசி இந்தியிடம் உள்ளது, அதில், ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம், "கொரோனா வைரஸ் நோய் சிகிச்சையில் ஆயுர்வேத மருந்துகளின் விளைவு" குறித்து மருத்துவ சோதனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தின் படி, பதஞ்சலி ஆய்வு நிறுவனமானது மே 20, 2020 அன்று, சி டி ஆர் ஐ இணைய தளத்தில் இதைப் பதிவு செய்துள்ளது. மேலும், இந்த பரிசோதனைக்காக முதல் கோவிட் 19 நோயாளி மே 29, 2020 அன்று பதிவு செய்யப்பட்டதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனை தொடங்கிய இருபத்தைந்தே நாட்களுக்குப் பிறகு ஜூன் 23, 2020 அன்று யோகா குரு பாபா ராம்தேவின் நிறுவனமான பதஞ்சலி ஆய்வு நிறுவனம் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, 'கொரொனில் மாத்திரை' மற்றும் 'சுவாசாரி வடி' எனும் இரண்டு மருந்துகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியில், பதஞ்சலி நிறுவனம், 'இந்த மருந்துகள் கோவிட் 19 நோயைக் குணப்படுத்தக்கூடியவை' என்றும் அறிவித்தது.

மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அதில் கொரோனா தொற்றுள்ளவர்களில் 100 சதவீதம் குணம் பெற்றதாகவும் பதஞ்சலி நிறுவனம் அறிவித்தது.

மாற்றிப் பேசிய பதஞ்சலி

பதஞ்சலி நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், அமைச்சகத்திற்கு இது குறித்த எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்தது.

மருந்தின் பெயர் மற்றும் அதன் கூறுகள் குறித்து தெரிவிக்குமாறு பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மாதிரி அளவு, சோதனை நடத்தப்பட்ட ஆய்வகம் அல்லது மருத்துவமனை மற்றும் அறநெறி குழுவின் ஒப்புதல் உள்ளிட்ட பிற முக்கிய தகவல்களை வழங்க பதஞ்சலி நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

கொரொனில்: யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் கொரொனா மருந்தின் உண்மை

பட மூலாதாரம், Getty Images

பதஞ்சலியின் இந்த மருந்தை விளம்பரப்படுத்த அமைச்சகம் தற்போது தடை விதித்துள்ளது. இருப்பினும், ஜூலை 1 புதன்கிழமை பதஞ்சலி ஒரு செய்திக்குறிப்பில் ஒரு புதிய கூற்றை வெளியிட்டுள்ளது.

"ஆயுஷ் அமைச்சின் அறிவுறுத்தலின் படி, உத்தரகண்ட் அரசின் மாநில உரிம ஆணையம், ஆயுர்வேத-யுனானி சேவைகள் அமைப்பு மூலமாக, திவ்யா கொரோனில் மாத்திரைகள், திவ்யா சுவாசாரி வடி மற்றும் திவ்ய அணு எண்ணெய் ஆகியவற்றை தயாரித்து விநியோகிக்கப் பதஞ்சலிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அதை சீராக இயக்க முடியும். " என்று அது தெரிவிக்கிறது.

கோவிட் -19 நோய்த்தொற்றிலிருந்து 'நோயாளிகளை விடுவிப்பதான' தனது பழைய கூற்றை மீண்டும் கூறாமல், இப்போது, மொத்தம் 95 கொரோனா நோயாளிகள் தாமாக பரிசோதனைக்கு முன்வந்ததாகவும், அதில் 45 பேருக்கு பதஞ்சலியின் மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் 50 பேருக்கு மருந்துப்போலி வழங்கப்பட்டதாகவும் பதஞ்சலி கூறியுள்ளது.

"இது கோவிட் -19 நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகளின் முதல் மருத்துவ கட்டுப்பாட்டுச் சோதனை, இப்போது நாங்கள் இந்த மருந்துகளின் மல்டிசென்ட்ரிக் மருத்துவ பரிசோதனைகளை நோக்கி நகர்கிறோம்." என்று அந்தக் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்தத் தன்னிலை விளக்கத்திற்கு ஒரு நாள் முன்னர், அதாவது, செவ்வாயன்று, பதஞ்சலி இந்த விஷயத்தில் யு-டர்ன் எடுத்து, "நாங்கள் கொரோனா கிட் தயாரிக்கும் அறிவிப்பை வெளியிடவில்லை" என்று கூறியுள்ளது.

ஆனால், இன்னும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டியுள்ளது.

அவை என்னென்ன கேள்விகள்?

கொரொனில்: யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் கொரொனா மருந்தின் உண்மை

பட மூலாதாரம், Getty Images

முதலாவதாக, பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்துகள் அனைத்து கொரொனா நோயாளிகளுக்கும் ஒரே அளவில் தான் வழங்கப்பட்டது என்பதற்கு என்ன சான்று?ஒரு மருந்தின் மருத்துவ சோதனையின் போது, மருந்தின் அளவை மாற்ற முடியாது என்பது நிபுணர்களின் கருத்து உதாரணமாக, ஒரு நோயாளிக்குக் காய்ச்சலுக்கு பாராசிட்டமால் வழங்கப்பட்டால், மருந்தில் 10 மி.கி, 12 மி.கி அல்லது 15 மி.கி என்று எதுவானாலும் ஒரே சீராக இருக்க வேண்டும். எந்த அளவு மருந்து எடுத்துக் கொண்டதால் காய்ச்சல் குறைந்தது என்று அப்போது தான் உறுதிப்படுத்த முடியும்.

பதஞ்சலி தனது மருந்து ஆயுர்வேத மருந்து என்று கூறுவதால், இந்த மருந்துகளின் உருவாக்கக் கூறுகளும் சமமாக இருக்க வேண்டும்.இது தொடர்பான இரண்டாவது கேள்வி என்னவென்றால், கோவிட் -19 இன் 95 நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் இது 'கொரோனாவுக்கான சிகிச்சை' என்று அறிவிப்பது சரியானதா, இது 130 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் இது அறிமுகப்படுத்தப்பட்டும் உள்ளது."

"மருத்துவ பரிசோதனைகள் ஒரு நீண்ட செயல்முறை மற்றும் இது மருந்துகளின் எதிர்காலம் மட்டுமல்ல, இது பரிசோதிக்கப்படும் மனிதர்களின் எதிர்காலம் குறித்ததும் ஆகும். " என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் தலைவர் என்.ஆர்.கே கங்குலி கருத்து தெரிவிக்கிறார்.

25 நாட்களுக்குள், வெறும் 95 கொரொனா நோயாளிகளுக்கு மட்டுமே நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், 'கொரோனில் மாத்திரை' மற்றும் 'சுவாசரி வடி' ஆகிய இரண்டு மருந்துகள் கொரொனாவை குணப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மருந்துகள் என்று அறிவிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது எப்படி என்பதற்கு இன்னும் பதஞ்சலி ஆராய்ச்சி மையத்திடமிருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை.

பதஞ்சலி தனது படிவத்தில் (சி.டி.ஆர்.ஐ / 2020/05/025273) சி.டி.ஆர்.ஐ இணையதளத்தில் பதிவு செய்திருந்தபோது, ​​மருத்துவ பரிசோதனையின் காலம் இரண்டு மாதங்கள் என்று குறிப்பிட்டிருந்தது.

மூன்றாவது கேள்வி கொரோனாவின் நோயாளிகள் எந்தச் சூழ்நிலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது குறித்து எழுகிறது. ஜெய்ப்பூரில் உள்ள தேசிய மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மேற்பார்வையில் அனைத்து 95 சோதனைகளும் நடத்தப்பட்டதாகப் பதஞ்சலி நிறுவனம் கூறுகிறது.ஐ.சி.எம்.ஆரின் சி.டி.ஆர்.ஐ இணையதளத்தில் பதிவு செய்யும் போது, ​​பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், தனது மருத்துவ பரிசோதனையில் கொரோனாவின் 'மிதமான அறிகுறி' நோயாளிகள் ஈடுபடுத்தப்படுவர் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், அப்படி செய்யப்படவில்லை.

'கொரோனில்' என்ற மருந்தின் சோதனையில் ஈடுபட்ட, தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு மூத்த மருத்துவர் "பரிசோதனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகள் 35-45 வயதுடையவர்கள், பெரும்பாலானவர்கள் அறிகுறியற்றவர்கள் அல்லது மிகவும் மிதமான அறிகுறிகள் இருந்தவர்கள் " என்று பிபிசி இந்தி நிருபரிடம் தெரிவித்தார்,

Banner image reading 'more about coronavirus'
Banner

பரிசோதனை குறித்து பதஞ்சலி நிறுவனம் ஏன் தகவல் வெளியிடவில்லை?

இந்த சோதனையில் நீரிழிவு அல்லது இரத்த அழுத்தம் குறித்து புகார் அளித்த நோயாளிகள் இடம்பெறவில்லை என்பது கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம்.

இது முக்கியமானது, ஏனென்றால் WHO உட்பட உலகின் பெரிய மருத்துவ வல்லுநர்கள், இந்த இரண்டு நோய்களாலோ அல்லது இந்த இரண்டில் ஒரு நோயாலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரொனா அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று நம்புகிறார்கள்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகளின் பட்டியலை ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ளதால், பதஞ்சலி மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட்ட நோயாளிகள் ஏற்கனவே எந்த மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான தெளிவான தகவலும் இல்லை.

மருத்துவ நிபுணர்களின் கேள்வி என்னவென்றால், இதற்கு முன்னர் நோயாளிகள் ஏதேனும் அலோபதி மருந்தை உட்கொண்டிருந்தால், ஆயுர்வேத மருத்துவத்திற்குப் பிறகு, இவை இரண்டில் எதன் தாக்கம் இருந்தது என்று எவ்வாறு அளவிட முடியும் என்பது தான்.

பிரபல பொது சுகாதார நிபுணர் தினேஷ் தாக்கூர் பதஞ்சலியின் மருத்துவ பரிசோதனையின் முடிவுகள் குறித்தும் கேள்வி எழுப்பினார், "மிகக் குறைந்த நோயாளிகளின் சோதனைகளின் அடிப்படையில் இது கொரோனாவுக்கான சிகிச்சை என்று நீங்கள் எவ்வாறு உறுதியளிக்க முடியும்?" என்பது அவரது கேள்வி.இறுதியாக, மிக முக்கியமான கேள்வி எழுகிறது.

கொரோனா வைரஸ்

பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் மே மாதத்தில் சி.டி.ஆர்.ஐ இணையதளத்தில் பதிவுசெய்திருந்த பட்சத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்து கொண்டிருந்தால், டி.ஜி.சி.ஐ மற்றும் ஐ.சி.எம்.ஆர் (ஐ.சி.எம்.ஆர்) எந்த நோயாளிகளுக்குச் சோதனை செய்யப்பட்டது என்பது குறித்த தகவல் ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி தான் அது.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுள்ளவர்கள் அனைவரின் பட்டியலும் ஐ.சி.எம்.ஆர்- இடமும் மாநிலத்தின் கோவிட் -19 நோடல் அதிகாரி, மாவட்ட நிர்வாகம் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி ஆகியோரிடமும் உள்ளது.

பதஞ்சலியின் 'கொரோனா கிட்' சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே ஆயுஷ் அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தாலும், இந்தச் சோதனையின் முடிவுகள் குறித்து இறுதியாக பொதுமக்களுக்கு வருவதற்கு முன்பு பதஞ்சலி ஏன் அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெறவில்லை என்பது குறித்தும் கேள்விகள் எழுகின்றன.

நேரடியாகச் சந்தையை அடையக்கூடிய எந்தவொரு மருந்தின் சோதனை குறித்தும் கேள்வி எழுப்பப்படும் போது, அத்தகைய முடிவெடுக்கும் நிறுவனங்களுடன் தொடர்புடைய நபர்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் நடைமுறையில் உள்ளன என்றும் அவை தொடரும் என்று நம்பிக்கை கொள்கிறார்கள்.முன்னாள் ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ஜெனரல் வி.எம். கடோச் கூறுகையில், "சி.டி.ஆர்.ஐ.யில் மருந்துப்பரிசோதனைகளுக்கு பதிவு செய்வதற்கான நோக்கம் எல்லா நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்பது தான். இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.ஜி.சி.ஐ) அதை கட்டாயப்படுத்தியிருக்கும் நிலையில் அதை மீறுவது சாத்தியமில்லை " என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: