சென்னை அண்ணாசாலையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள காமராஜர் அரங்கம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிச் சென்றுள்ளனர்.
இந்தத் தகவலை காவல்துறையினர் உறுதி செய்தனர்.
போக்குவரத்து அதிகம் உள்ள மாலை நேரத்தில் நாட்டு வெடிகுண்டை வீசிச்சென்றதால், அண்ணா சாலையில் பயணித்தவர்கள் பதற்றம் அடைந்தனர். சிசிடிவி காட்சிகளை பயன்படுத்தி, குண்டு வீசிச்சென்றவர்களை காவல்துறையினர் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் அங்கிருந்த கார் மற்றும் கடைகளின் கண்ணாடிகள் உடைந்தன. அந்த வழியில் பயணித்த மக்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
குண்டு வீசப்பட்ட இடம் தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு அருகே உள்ளதால், அந்தப்பகுதி மிகவும் பரபரப்பாக காட்சி அளிக்கிறது. சம்பவம் நடந்த இடத்தில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார்.
"இந்த குண்டுகளை வீசியது யார், எதற்காக வீசினர் என காவல்துறையினர் விசாரணையை செய்துவருகின்றனர். ஆனால் அங்கு வீசப்பட்டது நாட்டு வெடிகுண்டுதான் என உறுதிசெய்துள்ளோம்,'' ஆணையர் விஸ்வநாதன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
கடந்த 2017ஆண்டு ஜூலை மாதம், சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் மண்ணெண்ணை குண்டு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- இரும்புக் கம்பிகளுடன் சென்ற இளைஞர்களும், ஜெய் ஸ்ரீராம் கோஷமும்: பிபிசி செய்தியாளரின் அனுபவம்
- டெல்லி வன்முறை: ஏன் துரிதமாக செயல்படவில்லை? - காவல்துறையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி
- கொரோனா வைரஸ்: இத்தாலியில் கடும் பாதிப்பு - அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிலவரம் என்ன?
- டெல்லியில் வன்முறை வெறியாட்டத்தில் தீக்கிரையான மசூதி - புகைப்படத் தொகுப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












