சந்திரயான் 2: நிலவுக்கு மனிதர்கள் மீண்டும் செல்வதற்கான பிரசாரத்தின் அடித்தளம்

சந்திரயான் 2

பட மூலாதாரம், iSro

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க விண்வெளி ஆய்வு திட்டமான சந்திரயான் 2, உலகளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் "நிலவுக்கு திரும்பச் செல்லுங்கள்" (நிலவில் ஆய்வு கூடத்தை அமைக்கும் திட்டம்) எனும் பிரசாரத்துக்கான அடித்தளத்தை அமைத்துத் தரக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சந்திரயான் 2 திட்டத்தின் முக்கியத்துவதும் வாய்ந்த பிரக்யான் எனும் ஆய்வு ஊர்தி லேண்டரிலிருந்து வெளியே வந்து, நிலவின் பரப்பில் ஆய்வு செய்யும்போது, நீர் அல்லது பனிக்கட்டி இருப்பது உறுதிசெய்யப்பட்டால், பூமியின் இந்த துணைக்கோள் எதிர்காலத்தில் மனிதர்களின் வாழ்விடமாக மாறுவதற்கான மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்குமென்று கருதப்பட்டது.

அதுமட்டுமின்றி, சந்திரயான் 2இன் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியன செல்வதற்கான இலக்காக இருந்த நிலவின் தென்துருவத்திற்கு, 2024இல் செல்வதற்கு உத்தேசித்துள்ள நாசாவின் திட்டத்திற்கு அது பெரிதும் உதவியிருக்கும்.

நிலவின் மேற்பரப்பில் நீர்

பட மூலாதாரம், ISRO

"அடிப்படையில், சந்திரயான் 2 பூமியின் துணைக்கோள் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்," என்று பிபிசியிடம் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

திட்டமிட்டபடி நடந்திருந்தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தப்படியாக நிலவின் மேற்பரப்பில் சுமூகமாக தரையிறங்கும் நான்காவது நாடாக இந்தியா இருந்திருக்கும். ஆனால், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இலக்கு வைத்த முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடைபெற்றுள்ள பெரும்பாலான நிலவு பயண பணித்திட்டங்கள் அதன் மத்தியரேகை பகுதியிலேயே நிகழ்ந்துள்ளன.

விண்வெளிக்கு ஆட்களை அனுப்புகின்ற திட்டம் ஏற்கெனவே தொடங்கியுள்ளது. "அடுத்த ஆண்டு சூரிய பயணத்திட்டம் ஒன்று உள்ளது. ஒரு சமயம் ஒரு திட்டத்தை செயல்படுத்துகின்றோம் என்கிறார் பெங்களூரில் உள்ள பேராசிரியர் யு.ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் டிகே அலெக்ஸ்.

பேராசிரியர் யு.ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தின் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா செயற்கைக்கோள் ஏவு மையத்தின் இன்னொரு முன்னாள் இயக்குநர் டாக்டர் ராமபத்திரன் அராவாமுதன் தெரிவிக்கையில், நிலவுக்கு செல்லும் சக்தி வாய்ந்த ராக்கெட்டுகளை கொண்டுள்ள பிற நாடுகளைவிட, நாம் மிகவும் நவீனமான, செலவு குறைப்பதற்காக குறைந்த எரிபொருள் செலவு செய்யும் விதமாக இதனை உருவாக்கியுள்ளோம்," என்றார்.

சந்திரயான் 2

மேலும், தொலைதூர உணர்வறிதல் (remote sensing) மற்றும் செயற்கைக்கோள் மூலம் தகவல் தொடர்பு போன்ற தேசத்தின் சாதாரண தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு இருக்கின்ற வன்பொருளோடு ஒரு பணித்திட்டத்தை மேலாண்மை செய்வதற்கு இந்த பணித்திட்டம் ஓர் எடுத்துக்காட்டு. கூடுதல் தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டு, தேவையான மென்பொருள்களும் இதிலுள்ளது என்று அவர் கூறினார்.

நீண்டகால அளவில், இது இப்போது நடைபெற போவதில்லை. இன்னும் 50 ஆண்டுகளில் நாம் மக்களை நிலவுக்கு அழைத்து செல்லலாம் என்றும் டாக்டர் ராமபத்திரன் கூறினார்.

சந்திரயான் 1 மற்றும் மங்கள்யான் போன்ற எமது பணித்திட்டங்கள் பல இளைஞர்களை ஊக்கமூட்டியது. குறைவான செலவில் இவை செய்யப்படுவது, இந்த திறன் இல்லாத நாடுகளின் விண் ஏவு பணித்திட்டங்களை இந்தியா மூலம் நிறைவேற்றவும் வாயப்பளிப்பதாக தெரிவித்தார்,

சந்திரயான 2 பிரிதல்

நிலவின் துருவ பகுதியில், மூன் இம்பேக்ட் புரோப் கருவியை சந்திரயான் 1 கொண்டு சேர்த்துள்ளது. இதில் இந்திய கொடி இருக்க வேண்டுமென முன்னாள் குடியாரசு தலைவர் அப்துல் கலாமால் முன்மொழியப்பட்டது. 15 கிலோ எடையுடைய பெட்டி கலனில் இருந்து பிரிந்து நிலவின் மேற்பரப்பில் மோதியது.

அதில் எம்3 (நிலவு நீரியல் கண்டறியும் கருவி) எனப்படும் நாசாவின் கருவி இருந்தது. நிலவின் மேற்பரப்பிலுள்ள மண்ணில் நீர் இருப்பதை இது உறுதிப்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: