ராம் ஜெத்மலானி: பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் தனது 95 வயதில் காலமானார்

ராம் ஜெத்மலானி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராம் ஜெத்மலானி

இந்தியாவின் பிரபல வழக்கறிஞரும், அடல் பிகாரி வாஜ்பேயி அரசாங்கத்தில் சட்ட அமைச்சராகவும் பதவி வகித்த ராம் ஜெத்மலானி இன்று காலமானார். அவருக்கு வயது 95.

1996இல் வாஜ்பேயி தலைமையில் அமைந்த அரசில் சட்ட அமைச்சராக பதவியேற்றார். எனினும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் அந்த அரசு 13 நாட்களில் கவிழ்ந்தது.

பின்னர் 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபின் நகர்ப்புற வளர்ச்சி, சட்டம் ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்தார்.

எனினும் அப்போது உச்ச நீதிமன்றத் தலைமை ஏ.எஸ்.ஆனந்த் மற்றும் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜீ ஆகியோருடன் ராம் ஜெத்மாலனிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரை தமது அமைச்சரவையில் இருந்து விலக வாஜ்பேயி அறிவுறுத்தினார். அதன்பின் ராம் ஜெத்மலானி பதவி விலகினார்.

செப்டம்பர் 1, 1923ஆம் ஆண்டு பிறந்த அவர், பல முக்கிய கிரிமினல் வழக்குகளில் வாதாடியுள்ளார்.

தற்போது பாகிஸ்தானில் இருக்கும் சிந்து மாகாணத்தில் உள்ள ஷிகர்பூரில் பிறந்த ராம் ஜெத்மலானி, பிரிவினையின் போது இந்தியாவுக்கு வந்தார். தனது 17வது வயதில் சட்டம் படித்து பட்டம் பெற்றார் ராம் ஜெத்மலானி.

அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

கட்சியில் இருந்து நீக்கம்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களை பாஜக கண்டுகொள்ளவில்லை என்று விமர்சித்து 2012இல் அவர் அப்போதைய பாஜக தேசிய தலைவர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதினார். பின்னர் அக்கடிதம் பொது வெளியில் பிரபலமானது.

அப்போது பாரதிய ஜனதா கட்சி தலைவராக இருந்த நிதி கட்கரி மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

அதைத் தொடர்ந்து கட்சிக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாக 2013இல் ஆறு ஆண்டுகளுக்கு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

2014 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பு நரேந்திர மோதிக்கு ஆதரவாக இருந்த அவர், தேர்தலுக்கு பிறகு எதிராக மாறினார். பாஜக சார்பாக இருமுறை மக்களவை எம்பி-யாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் அருண் ஜேட்லி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தபோது, கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாதாடினார் ஜெத்மலானி.

தலைவர்கள் இரங்கல்

"இந்தியா ஒரு தனித்துவமிக்க வழக்கறிஞரை இழந்துவிட்டது. நீதிமன்றத்திற்கும் நாடாளுமன்றத்துக்கும் அவர் அளித்த பங்களிப்பு முக்கியமானது. எந்த விஷயத்திலும் தைரியமாக தனது கருத்தை பதிவு செய்பவர் ராம் ஜெத்மலானி" என்று பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

ராம் ஜெத்மலானியின் மறைவு தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். நாம் ஒரு முக்கிய வழக்கறிஞரை மட்டுமல்ல, ஒரு நல்ல மனிதரையும் இழந்துவிட்டோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

ராம் ஜெத்மலானியில் மறைவுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

கிரிமினல் சட்டங்களில் ராம் ஜெத்மலானிக்கு இருக்கும் அறிவாற்றலுக்கு நிகரில்லை என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் குறிப்பிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: