தமிழிசை சௌந்தரராஜன்: தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார்

பட மூலாதாரம், facebook
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ராகவேந்திரா சௌஹான் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தெலங்கானா ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட தமிழிசை, தனது தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் பதிவியை சில தினங்களுக்கு முன்பு ராஜிநாமா செய்தார்.
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றுள்ள இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் மகள் ஆவார்.
கடந்த 2014ஆம் ஆண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழிசை.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியடைந்தார் தமிழிசை.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
தமிழிசை இதுவரை இரண்டு முறை தமிழகச் சட்டமன்ற தேர்தலிலும், இரண்டு முறை மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார்.
"தெலங்கானாவின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பாடுபடுவேன்" என்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன் ஆளுநராகும் அறிவிப்பு வெளியானபின் கூறியிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












