ஃபானி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்

ஃபானி புயல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

ஏப்ரல் 30ம் தேதி கரையை கடக்கும் ஃபானி புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கரைகளுக்கு அருகில் வரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் அடுத்த 24 மணிநேரத்தில் ஃபானி புயல் வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளார்.

''தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் வட தமிழகத்தின் கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 1,250 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்துவரும் 24 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கரை அருகில் வரக்கூடும்,'' என்கிறார் பாலச்சந்திரன்.

காணொளிக் குறிப்பு, ரெட் அலர்ட் என்றால் என்ன? மக்கள் பயப்பட வேண்டுமா?

இதனிடையில் தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் புயல் தாகத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பான கூட்டத்தை நடத்தியுள்ளார்.

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருப்பதாகவும், மாவட்ட அளவில் நிவாரண முகாம்கள் மற்றும் மருந்து பொருட்கள் கையிருப்பு வைக்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :