காதலர் தினம்: மாணவிகள் சேர்ந்து ஒரு பையனை அடித்ததாக வெளியான காணொளி உண்மையா? #BBCFactcheck

காதலர் தினம்: ஒரு பையனை மாணவியர் அடித்ததாக வெளியான காணொளி உண்மையா?

பட மூலாதாரம், SM Viral Video Grab

காதலர் தினத்தன்று பெண்கள் குழுவாக சேர்ந்து, ஒரு பையனை அடிக்கின்ற காணொளி சமூக ஊடகங்களில் பெரிதும் பகிரப்பட்டுள்ளது.

கடந்த 48 மணிநேரத்தில் பல்வேறு ஃபேஸ்புக் குழுக்களில் பகிரப்பட்ட இந்த காணொளியை பல்லாயிரக்கணக்கானோர் பகிர்ந்துள்ளனர்.

காதலை வெளிப்படுத்தும் தினம் (Propose Day) மற்றும் காதலர் தினத்தின்போது (Valentine's Day) சமூக ஊடக தளங்களில் இந்த 30 வினாடி காணொளி பரவலாக பகிரப்பட்டுள்ளது.

சமூக ஊடக தளங்களில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படும் இடம் வேறுப்படுகிறது.

காதலர் தினம்: ஒரு பையனை மாணவியர் அடித்ததாக வெளியான காணொளி உண்மையா?

பட மூலாதாரம், SM Viral Video Grab

மத்திய பிரதேச மாநிலத்தின் ராட்லாம், ராஜஸ்தானின் கோடா, உத்தர பிரதேசத்தின் முராடாபாடின் மற்றும் சண்டிகரின் ஜான்ஜ்கிர்-காம்பா மாவட்டத்தில் இந்த காணொளி எடுக்கப்பட்டதாக வேறுப்பட்ட இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

டைனிக் பாஸ்கர் தகவலின் அடிப்படையில், மத்திய பிரதேச மாநிலத்தின் ராட்லாம் என்ற இடத்தில் நடைபெற்ற சம்பவம்தான் இந்த காணொளி என்று பலர் கூறியுள்ளனர்.

ஆனால், இவை அனைத்தும் தவறானவை என்று நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

எமது புலனாய்வில், வைரலான இந்த காணொளி ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடைபெற்ற சம்பவம் என்றும், காதலர் தினத்திற்கும் இந்த காணொளிக்கும் எந்தவித சம்மதமும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

ஊடகங்களின் தகவல்கள்படி, ஜோத்பூருக்கு பக்கத்திலுள்ள ராணிவாடாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒழுக்கமற்ற நடத்தையின் காரணமாக ஜோத்பூரிலுள்ள அரசு மகளிர் பள்ளியின் மாணவியர் இந்த பையனை அடித்துள்ளனர்.

காதலர் தினம்: ஒரு பையனை மாணவியர் அடித்ததாக வெளியான காணொளி உண்மையா?

பட மூலாதாரம், SM Viral Video Grab

ராஜஸ்தானின் ராணிவாடா காவல்துறை பிபிசியிடம் பேசுகையில், புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், அதிகாரிகள் இடமாற்றம் பெற்றுவிட்டதால், இந்த சம்பவத்தின் தகவல்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதனை வெளியிட்ட டைனிக் பாஸ்கர், ராஜஸ்தானின் ஜோத்பூரில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறுகிறது.

2019ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி மீண்டும் வெளியிட்டு, மத்திய பிரதேசத்தின் ராட்லாம் பகுதியில் நிகழ்ந்ததாக தெரிவித்திருந்தது.

இதேபோல நியூஸ்-18, 2018ம் ஆண்டும் இந்த தகவலை ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடைபெற்ற சம்பவமாக குறிப்பிட்டது. ஆனால், இப்போது இந்த செய்தித்தளமும் இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தை மாற்றி வெளியிட்டுள்ளது.

காதலர் தினம்: ஒரு பையனை மாணவியர் அடித்ததாக வெளியான காணொளி உண்மையா?

பட மூலாதாரம், WEBSITE GRAB

ராஜஸ்தானின் நாளேடான "ராஜஸ்தான் பாடிரிக்கா"-வும் 2019 பிப்ரவரி 13ம் தேதி இந்த காணொளியை வெளியிட்டுள்ளது.

ஆனால், இந்த செய்தி தவறானது என்று ஜோத்பூர் மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :