பிகார் ரயில் தடம்புரண்டு விபத்து: 7 பேர் பலி

பட மூலாதாரம், Shashi Kumar
பிகாரில் உள்ள ஜோக்பானியில் இருந்து டெல்லி செல்லும் சீமாஞ்சல் விரைவு ரயிலின் 11 பெட்டிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 7 பேர் பலியாகி உள்ளதாக பிடிஐ மற்றும் ஏஎன்ஐ செய்தி முகமைகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விபத்தில் 32 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை இந்த ரயில் விபத்து குறித்து என்ன தெரியும்?

பட மூலாதாரம், Getty Images
12487 என்ற எண்ணுடைய ஜோக்பானி-ஆனந்த் விஹார் சீமாஞ்சல் விரைவு ரயில் தடம் புரண்டது.
ரயில் பாதை: பிகாரின் கிஷன்கஞ்ச் பகுதி ஜோக்பானியில் இருந்து டெல்லி ஆனந்த் விஹார்
விபத்து நடந்த நேரம்: ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 4 மணி
இறப்பு எண்ணிக்கை: 7 பேர் உயிரிழந்துள்ளனர், 32 பேர் காயமுற்றனர்
விபத்து நடந்த இடம்: ஹாஜ்பூர்-பச்வாடா ரயில் நிலையத்தின் மஹானர் மற்றும் சஹோதோய் நிலையங்களுக்கு இடையில் சஹாய் புஜுர்க்காவில் விபத்து நடந்துள்ளது.
விசாரணை: விபத்து குறித்து விசாரணை நடத்த ரயில்வேதுறை உத்தரவிட்டுள்ளது. ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் துணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, விபத்து குறித்து கவலை வெளிட்டுள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இதில் பலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












