நரேந்திர மோதி : ''வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஓர் அங்கம்''

பட மூலாதாரம், AFP Contributor
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மூன்று மாநிலங்களில் ஆட்சியை இழந்திருக்கிறது. காங்கிரஸ் மிசோரத்தில் ஆட்சியை இழந்தபோதிலும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியை பிடித்திருக்கிறார்.
"பாஜக மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்," என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.
வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஓர் அங்கம் என்றும் மோதி தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
''எதைச் செய்யக்கூடாது என்பதை மோதி எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார். அவர் இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் குரல்களுக்கு செவிமடுக்கவில்லை. ஒரு அரசியல்வாதிக்கு அகந்தை என்பது அபாயகரமானது'' என ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்''
''நமது இளைஞர்களின் எதிர்காலம் குறித்தும் எப்படி இந்திய நாடு வேலைகளை உருவாக்கப்போகிறது எனும் கேள்வி கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் மோதி தாம் உறுதியளித்தவற்றை செய்யவில்லை எனும் எண்ணம் நாடு முழுவதும் இருப்பது தெளிவாக தெரிகிறது'' என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1

பட மூலாதாரம், Kevin Frayer
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். இந்த தேர்தல் முடிவுகள் மக்கள் மதவாத சக்திகளை நம்பவில்லை என்பதும் அவர்களுக்கு உண்மையில் அமைதியும் முன்னேற்றமுமே தேவை என்பதை உணர்த்தியிருக்கின்றன என்கிறார் சரத் பவார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
''காங்கிரஸ் இல்லாத இந்தியா, எதிர் தரப்பே இல்லாத இந்தியாவை உருவாக்கவேண்டும் எனும் நோக்கங்கள் பாஜகவின் இறுமாப்பை காட்டுகின்றன. தற்போது பாஜகவுக்கு எதிராக வாக்களித்ததன் மூலமாக இறுமாப்பு அற்ற தேசத்தை உருவாக்கியிருக்கிறார்கள் மக்கள்.'' என தேவகவுடா ட்வீட் செய்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
''இனிமேலாவது ' பிரச்சனையில்லாத' தேசத்தை சாத்தியமாக்க பாஜக சில முயற்சிகளை செய்ய வேண்டும்'' என்கிறார் முன்னாள் பிரதமர் தேவகவுடா.
'' சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் சிறப்பான வெற்றியடைந்ததற்கு ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தேர்தல் முடிவுகள் பாசிச பாஜக ஆட்சிக்கு எதிரான நமது போராட்டங்களை வலுப்படுத்தும் மேலும் மகா கூட்டணி அமைப்பதற்கும் வலு சேர்க்கும்'' என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
வாக்கு இயந்திரங்கள் மீது குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழிசை செளந்தராஜன் கூறி உள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், வெற்றி தோல்விகள் எங்களை பாதிக்காது. வாக்கு இயந்திரங்கள் மீது குற்றஞ்சாட்டி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி உள்ளார். மேலும் இதனை ஒரு வெற்றிகரமான தோல்வி என பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
"மக்கள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இது மக்களின் தீர்ப்பு. இது இந்நாட்டு மக்களின் மற்றும் ஜனநாயகத்தின் வெற்றி," என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி ட்வீட் செய்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்