மாடுகளை இறைச்சிக்காக விற்கத் தடை: தமிழகக் கட்சிகள் கண்டனம்
சந்தைகளில் இறைச்சிக்காக பசு, காளை, எருமை, கன்றுக் குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை கண்டித்து, தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், சிறுபான்மைக் கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள விவசாயிகள், இனி பால்சுரப்பு நின்று போன மாடுகளையும், விவசாய பணிகளுக்கு உதவாத வயது முதிர்ந்த மாடுகளையும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்ற நிலை, பெரும் பொருளாதார இழப்புக்கு அவர்களைத் தள்ளும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், மாடுகளை வாங்கி விற்பவர்கள், இறைச்சி தொழிலில் ஈடுபடுபவர்கள் என்று பல்லாயிரக்கணக்கானவர்களை மத்திய அரசின் இந்த முடிவு வேலைஇழக்க வைக்கும் என்றும் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டவர்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டவர்கள் கூடுதலாக பாதிப்புகளை சந்திப்பார்கள் என்றும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் இதற்கு அடிபணிய மாட்டோம் என்ற நிலை எடுத்திருப்பதைப் போல, தமிழக அரசும் இதனை எதிர்க்க வேண்டுமென இக்கட்சிகள் கோரியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.கவும் காங்கிரஸ் கட்சியும் நாளை ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












