வைரவிழாவில் கருணாநிதி கலந்துகொள்ள மாட்டார்: மு.க. ஸ்டாலின்
கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவில், அவர் நிச்சயமாகக் கலந்துகொள்ள மாட்டார் என தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN
திமுக தலைவர் கருணாநிதி 1957-இல் குளித்தலை தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். அதற்குப் பிறகு நடந்த எந்த சட்டமன்றத் தேர்தலிலும் அவர் தோல்வியடையாமல், மீண்டும் மீண்டும் சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.
கருணாநிதி சட்டமன்றத்தில் நுழைந்து அறுபதாண்டுகள் நிறைவடையும் நிலையில், அதனை பெரிய அளவில் கொண்டாடுவதற்கு திமுக. ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி நடக்கும் இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சோனியா காந்திக்குப் பதிலாக ராகுல் காந்தி இந்த விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதி தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே ஓய்வெடுத்துவருகிறார்.
இந்த நிலையில், இந்த வைரவிழாவில் கருணாநிதி பங்கேற்பார் என சில நாட்களுக்கு முன்பாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கருணாநிதி இந்த விழாவில் நிச்சயம் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவித்தார். இருந்தபோதும், அந்தத் தருணத்தில் மருத்துவர்கள் அனுமதித்தால் பங்கேற்பார் என்றும் கூறினார்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












