' முதல்வராக நான் பொறுப்பேற்க வேண்டுமென வற்புறுத்தியவர் ஓ. பி.எஸ்.தான்'- சசிகலா

தமிழக முதல்வராக நான் பொறுப்பேற்க வேண்டும் என்று முதலில் வற்புறுத்தியவர் ஓ. பன்னீர்செல்வம்தான் என்று அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட வி .கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

' முதல்வராக நான் பொறுப்பேற்க வேண்டுமென வற்புறுத்தியவர் ஓ. பி.எஸ்.தான்'

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ' முதல்வராக நான் பொறுப்பேற்க வேண்டுமென வற்புறுத்தியவர் ஓ. பி.எஸ்.தான்'

' அதிமுகவின் பொதுச் செயலாளராக நான் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்தான்' என அதிகாவின் சட்டமன்ற கட்சித் தலைவரும், பொதுச் செயலாளருமான வி .கே. சசிகலா தெரிவித்துள்ளதாக அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.

அதிமுகவின் அதிகாரபூர்வ டிவிட்டர் செய்தி

பட மூலாதாரம், @AIADMK TWITTER

மேலும், தான் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம்தான் முதலில் வற்புறுத்தினார் என வி .கே. சசிகலா கூறியதாக, அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் அதிகாரபூர்வ டிவிட்டர் செய்தி

பட மூலாதாரம், @AIADMK TWITTER

மக்களின் நலனை காப்பதில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் வழியில் தமிழக அரசு செயல்படும் என்று வி .கே. சசிகலா தெரிவித்துள்ளதாக அதிமுக ட்விட்டர் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் அதிகாரபூர்வ டிவிட்டர் செய்தி

பட மூலாதாரம், @AIADMK TWITTER

முன்னதாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக , கட்சியின் பொதுச் செயலாளர் வி .கே. சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சசிகலா

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும், வி .கே. சசிகலா விரைவில் தமிழக முதல்வராக பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்