"ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்" - வாடிவாசல் திறக்கவில்லை

ஜல்லிக்கட்டு தொடர்பாக நிரந்தர தீர்வு வேண்டும்என்றும், தற்காலிக தீர்வில் தாங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அலங்காநல்லூரில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, அலங்காநல்லூர் வாடிவாசலில் ஜல்லிக்கட்டை நடத்த இன்று முடியாது என்று போராட்டக்கரர்கள் தெரிவித்துள்ளனர்.

காணொளி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லண்டனில் போராடிய தமிழர்கள்

நேற்று சனிக்கிழமை மத்திய அரசின் அனுமதியை பெற்று தமிழ் நாடு அரசு அவசர சட்டம் பிறப்பித்த நிலையில், இன்று ஜல்லிக்கட்டை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது,

மேலும், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு காளையை தயார் செய்து, கலந்து கொள்ளும் இளைஞர்களை மருத்துவ பரிசோதனை செய்து, பல்வேறு ஏற்பாடுகளை ஒருங்கிணைக்க குறைந்தபட்சம் 10 நாட்களாகும் என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

சிறிது நேரத்துக்கு முன்னர் பிபிசி தமிழோசை செய்தியாளர்கள் முரளீதரன் மற்றும் ஜெயக்குமாரிடம் ஃபேஸ்புக் நேரலை மூலம் பேசிய அவர்கள் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தனர்.

ஒரே நாளில் கொடியசைத்து ரயிலை ஓட செய்வதைபோல ஜல்லிக்கட்டை நடத்த முடியாது. எனவே உடனடியாக இந்த ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு நிரந்த தீர்வை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

காணொளி: ஜல்லிக்கட்டு - முதல் அமைச்சர் அறிவிப்பு குறித்து மக்கள் கருத்து

மேலும் தகவல்கள் அறிய:

காணொளி: ஜல்லிக்கட்டு ஆதரவு: பல்வேறு கோரிக்கைகள்; பல்வேறு உத்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்