You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜல்லிக்கட்டு அவசர சட்டம் ஏன் ? ஆளுநர் அலுவலகம் விளக்கம்
ஜல்லிக்கட்டு குறித்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அவசர சட்டம் எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் வைக்கப்படும் என்பதால், தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்பும் , போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவர் என்று நம்பிக்கையுடனிருப்பதாக தமிழக ஆளுநர் அலுவலகம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டின் கலசாரத்தை மதிக்கும் வகையிலும், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மக்களின் உணர்வுகளை மனதில் கொண்டும் , விலங்குகள் வன்கொடுமை தடுப்பு அவசர சட்டம் 2017 என்ற அவசர சட்டம் மூலம், தற்போது நிலுவையில் உள்ள மத்திய சட்டமான , 1960ம் ஆண்டைய விலங்குகள் வதைத் தடுப்பு சட்டத்தைத் திருத்தி, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு விலக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
அவசர சட்டம் வெளியிட்டால் போதாது, ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு சட்டபூர்வமாக நிரந்தர தீர்வு வேண்டும் என்று சென்னையில் போராட்டக்கார்ரகள் கோரிக்கையை வைத்து, போராட்டத்தை கைவிடமுடியாது என்று கூறிவரும் நிலையில இந்த அறிக்கை வந்திருக்கிறது.
அவசர சட்டம் கொண்டுவந்த பின்னணியை விளக்கிய ஆளுநர் அலுவலகம் , சட்டமன்றம் வரும் 23ம் தேதி கூடவிருக்கும் நிலையில், அவசர சட்டம் ஒன்றை பிறப்பிப்பதன் நியாயத் தன்மை பற்றி கருத்தில் கொள்ளப்பட்டது; ஆனால், சட்டமன்றம் அமர்வில் இருப்பது என்பது அது கூடும் முதல் தினம் முதல் அக்கூட்டத்தொடரை ஆளுநர் முடித்துவைப்பது வரை அது அமர்வில் இருப்பதாகக் கருதப்படும் என்பதை விளக்கியுள்ளது.
இந்நிலையில், இது குறித்த ஒரு மசோதா சட்டமன்றத்தில் வைக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட வேண்டுமானால். இந்த ஒட்டு மொத்த அரசியல் சட்ட வழிமுறை முடிய நீண்ட காலமெடுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவேதான், இந்த அவசர சட்டம் பிறப்பிப்பதுதான் இந்த தற்போதைய நிலைக்கு ஒரே ஜல்லிக்கட்டு அவசர சட்டம் ஏன் ? ஆளுநர் அலுவலகம் விளக்கம் பொருத்தமான, திருப்திகரமான தீர்வாக இருக்கும் என்று தான் கருதுவதாகவும் ஆளுநர் ராவ் குறிப்பிட்டுள்ளார்.