அன்னை தெரஸா கொல்கத்தா புனித தெரஸா ஆனார்

பட மூலாதாரம், AFP
வத்திக்கானிலுள்ள புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெறுகின்ற பூசையில் ரோமன் கத்தோலிக்க பெண் துறவி அன்னை தெரஸாவை போப் பிரான்சிஸ் புனிதராக பிரகடனப்படுத்தியிருக்கிறார்.

பட மூலாதாரம், epa
அல்பேனியாவை சேர்ந்த அன்னை தெரஸா 1997 ஆம் ஆண்டு இறந்தார்.

பட மூலாதாரம், epa
இந்தியாவின் தெருக்களில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் மக்களை பராமரிப்பதற்காக அன்பின் மறைபரப்பு கன்னியர் சபையை அவர் நிறுவினார்.
கொல்கத்தாவின் புனித தெஸா என்று அவர் அறியப்படுவார்.

பட மூலாதாரம், AP
ஏழைகளுக்கு உதவுவது என்று அன்னை தெரசா இவ்வுலகிற்கு விட்டு சென்றுள்ள பணியானது போப் பிரான்சிஸ் வைத்திருக்கும் திருச்சபையின் குறிக்கோளுக்கு சரியாக பொருந்துகிறது என்று செய்தியளர்கள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், EPA
சாவின் விளிம்பில் இருப்போரின் துன்பத்தை போக்க அன்னை தெரசா அவ்வளவாக எதுவும் செய்துவிடவில்லை என்கிறர்கள் விமசகர்கள்.

பட மூலாதாரம், Reuters
இந்துக்கள் அதிகமாக வாழும் இந்தியாவில் இருக்கும் கைவிடப்பட்டோரை கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்ற முயற்சித்ததாக அன்னை தெரசா விமர்சிக்கப்பட்டார்.








