பாலியல் அடிமைகள்: உடன்பாட்டை அமல்படுத்த ஜப்பான் - தென் கொரியா முயற்சி

பட மூலாதாரம், Getty Images

இரண்டாவது உலகப் போரின்போது, கொரியப் பெண்கள் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண எட்டப்பட்ட உடன்பாட்டை, அமல்படுத்துவது தொடர்பாக ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன.

ஜப்பான் விபசார விடுதிகளில் பாலியல் தொழிலாளர்களாக பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்ட கொரியப் பெண்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் நிதியுதவி அளிப்பது தொடர்பாக இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் தொலைபேசி மூலம் விவாதித்தனர்.

பட மூலாதாரம், Reuters

இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, தென் கொரியாவால் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்கம் மற்றும் குணப்படுத்தல் என்ற அமைப்புக்கு ஜப்பான் 9 மில்லியன் டாலர்களை வழங்கும்.

ஆனால், அந்தத் தொகை இழப்பீடாகக் கருதப்படக்கூடாது என்பதை உறுதி செய்ய ஜப்பான் விரும்பவுதாக செய்திகள் கூறுகின்றன.