தென்கொரிய தூதரகத்தில் வட கொரியா நாட்டை சேர்ந்தவர் தஞ்சம் கோரியதாக பரபரப்பு

ஹாங்காங்கில் உள்ள தென்கொரிய தூதரகத்தில், வட கொரியா நாட்டை சேர்ந்த ஒருவர் தஞ்சம் கோரியதாக பல கிழக்கு ஆசிய செய்தித்தாள்கள், செய்தி வெளியிட்டுள்ளன.

 கோப்புப்படம்

பட மூலாதாரம்,

படக்குறிப்பு, கோப்புப்படம்

தஞ்சம் கோரிய நபர், சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்காக ஹாங்காங் வந்துள்ள 18 வயது இளைஞர் என்று பெரும்பாலான தகவல்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் குறித்து உறுதி செய்ய தூதரக அதிகாரிகளும், போலீசாரும் மறுத்து விட்டனர். ஆனால், ஆயுதம் தாங்கிய சாதாரண உடையில் உள்ள அதிகாரிகள் தூதரகத்துக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஹாங்காங்கின் ராஜீய விவகாரங்கள் குறித்த அதிகாரங்களை வைத்துள்ள சீன அரசுக்கு இது குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது.