உயிருக்கு ஆபத்தானதா விண்வெளி பயணம்?

விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்டிரின்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்டிரின்

நிலவுக்கு பயணம் மேற்கொண்டதன் மூலம் விண்வெளியில் மனித நடவடிக்கைக்கான பாதையை வகுத்த விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்டிரின் போன்றவர்கள் தங்களுடைய உடல் நலனில் பெரும் தியாகங்களை மேற்கொண்டதாக அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

42 முன்னாள் விண்வெளி வீரர்களின் இறப்பு விகிதம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 1960களின் இறுதியில் மற்றும் 70களின் தொடக்கத்தில் அப்பல்லோ மிஷனில் பங்கெடுத்த 7 வீரர்களும், இதுவரை விண்வெளிக்கு செல்லாத 35 வீரர்களும் அடங்குவார்கள்.

விண்வெளி பயணங்களை மேற்கொள்ளாத அல்லது குறைந்த உயர பயணங்களை மேற்கொண்ட விண்வெளி வீரர்களையும் காட்டிலும், ஆழமான விண்வெளி பயணங்களை மேற்கொண்டவர்களுக்கு பூமியின் காந்தப் புலத்திற்கு வெளியே உள்ள காஸ்மிக் கதிர்வீச்சு காரணமாக இருதய நோயினால் ஏற்படும் மரணத்தை காட்டிலும் ஐந்து மடங்கு அதிமாக இருப்பதாக இந்த ஆய்வு அறிக்கை சொல்கிறது.

ஆனால், நாசா இந்த கண்டுபிடிப்புகளை நிராகரித்துள்ளது.