பாகிஸ்தான் மாடல் அழகியை கொலை செய்த அவரது சகோதரர் கைது
பாகிஸ்தானின் சமூக ஊடக நட்சத்திரங்களில் ஒருவரான கந்தீல் பலூச்சை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரை கைது செய்திருப்பதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்திருக்கிறது.

பட மூலாதாரம், Getty
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடும்ப வீட்டில் வைத்து அவருடைய குரல்வளையை நெரித்துக் கொன்றதை சகோதரர் வாசீம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஒத்துக்கொண்டார்.

பட மூலாதாரம், QandeelQuebee
பொது வெளியில் பிரபலமான அவரது தொழிற்முறை வாழ்க்கையை விட்டுவிட வலியுறுத்திய போது அதற்கு கந்தீல் பலூச் மறுத்துவிட்டதாக வாசீம் கூறினார்.

அவருடைய துணிச்சலான மற்றும் கிளர்ச்சியூட்டும் புகைப்படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகளை அடிக்கடி வெளிப்படையாக பொது இணையவெளியில் பதிவேற்றியதால் கந்தீல் பலூச் பிரபலமானார்.

பட மூலாதாரம், AFP
பலரையும் கவர்ந்திழுத்த கந்தீல் பலூச்சை சமூக ஊடகங்களில் அதிகமானோர் பின்பற்றி வந்தனர். ஆனால், பழமைவாதிகளால் அவர் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தார்.








