கல்வி சீர்திருத்தத்தை ரத்து செய்ய ஆசிரியர்கள் பேரணி
கல்வி சீர்திருத்தத்தை ரத்து செய்ய கோரி மெக்சிகோ நகரில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பேரணி நடத்தியுள்ளனர்.

பட மூலாதாரம், CNTE
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள தொழிற்சங்க தலைவர்கள் இருவரை விடுதலை செய்யவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆசிரியர்கள் செயல்திறன் மதிப்பீட்டிற்கு உள்ளாக வேண்டும் அல்லது பணிநீக்கத்தை சந்திக்க வேண்டும் என்று 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்த வரையறைகள் தெரிவிக்கின்றன.
கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை என்று மெக்சிகோ அரசு தெரிவிக்கிறது.
ஆனால், இந்த நடவடிக்கைகள் மெக்சிகோவின் தென் பகுதியிலுள்ள ஏழை மாநில ஆசிரியர் தொழிற்சங்கங்களின் கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளன.








