ஒரு பாலுறவுக்காரர்களுக்கான பத்திரிக்கையின் முன் அட்டையில் இளவரசர் வில்லியம்
ஒரு பாலுறவுக்காரர்களின் பாலியல் தன்மை காரணமாக, அவர்களை தாக்குபவர்களுக்கு எதிராகப் பேச, பிரிட்டன் அரச குடும்ப அரியணைக்கு ஏற இரண்டாவது நிலையில் உள்ள இளவரசர் வில்லியம், ஒரு பாலுறவுக்காரர்களுக்கான பத்திரிக்கையொன்றின் முன் அட்டையில் தோன்றியுள்ளார்.

ஆண் ஒரு பாலுறவுக்காரர்கள், பெண் ஒரு பாலுறவுக்காரர்கள், இரு பாலுறவுக்காரர்கள் மற்றும் அரவாணிகள் ஆகியோர் தாங்கள் யார் என்பதில் பெருமை கொள்ள வேண்டும் என்று ‘அட்டிட்யூட்’ எனப்படும் அந்த பத்திரிக்கையில் வில்லியம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து ஒரு பாலுறவுக்காரர்களுக்கான பத்திரிக்கையின் அட்டையில் தோன்றும் முதல் நபர் வில்லியம் ஆவார்.
கடந்த மாதம் லண்டனில் ஒரு கருத்தரங்கை நடத்திய இளவரசர் வில்லியம், ஒரு பாலுறவுக்காரர்கள் மற்றும் அரவாணிகளிடம், அவர்களை தாக்கியவர்களால் ஏற்பட்ட அனுபவம் மற்றும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட மனப் பாதிப்பு குறித்து, முதல்முறையாகக் கேட்டறிந்தார்.








