இணைய தாக்குதல்களுக்கு பின்னால் வட கொரியாவா?

தென் கிழக்கு ஆசியாவிலுள்ள மூன்று வங்கிகள் பயன்படுத்திய கணினி அமைப்புகளில் நடத்தப்பட்ட இணைய தாக்குதல்களுக்கு பின்னால் வட கொரியா உள்ளதா என்று உலகிலேயே பெரிய இணைய பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்று விசாரித்து வருகிறது.

பட மூலாதாரம், Thinkstock

ஒரே மாதிரியான, அரிதான, தீங்கு விளைவிக்கும் செயலியை இந்த மூன்று தாக்குதல்களிலும் கண்டறிந்துள்ளதாக சைமென்டெக் (Symantec) நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு தாக்குதலில் 80 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.

பட மூலாதாரம், kyiv.npu.gov.ua

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சோனி பிக்சர்ஸில் ஊடுருவ பயன்படுத்தியதை போன்ற அதே மாதிரி கணினி சங்கேதக் குறியீடுதான் இம்முறையும் பயன்படுத்த பட்டிருப்பதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது.

அந்த சம்பவத்தில், அமெரிக்கா வட கொரியா குற்றம் சாட்டியிருந்தது.

பட மூலாதாரம், Getty

வங்கிகளை குறிவைப்பது வட கொரியாவாக இருந்தால், இணைய தாக்குதல் மூலம் வங்கிகளிலிருந்து கொள்ளையடித்தாக கண்டறியப்பட்ட முதல் நாடாக இது இருக்கும் என்று சைமென்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.