'அசாஞ்சுக்கு சாதகமாக ஐநா தீர்ப்பு'
விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சின் விவகாரத்தை ஆராய்ந்த ஐநா குழு அவருக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.

பட மூலாதாரம், AFP
பிரிட்டன் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளால், தான் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் முறையிட்டிருந்தார்.
சுவீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக அசாஞ்ச் லண்டனில் உள்ள ஈக்குடோரியன் தூதரகத்தில் 3 வருடங்களுக்கும் மேலாக தஞ்சமடைந்திருக்கிறார்.
சுவீடனில் ஒரு பாலியல் வல்லுறவு குறித்த குற்றச்சாட்டுக்கான விசாரணையை அவர் எதிர்கொள்கிறார்.
சட்டப்படி அமல்படுத்தப்பட முடியாத தமது முடிவு குறித்து பிரிட்டனுக்கும், சுவீடனுக்கும் ஐநாவின் எதேச்சதிகாரத்துடனான தடுத்து வைப்புக்கள் குறித்த குழு அறிவித்திருக்கிறது.
அசாஞ்ச் தூதரகத்தை விட்டு வெளியே வரும்போது அவரை கைது செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்று பிரிட்டிஷ் போலிஸ் கூறுகின்றது.








