பதான்கோட் தாக்குதல்:பாகிஸ்தானில் பலர் கைது

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள விமானப் படைத் தளம் ஒன்று தாக்கப்பட்டது தொடர்பில், தடை செய்யப்பட்ட தீவிரவாதக் குழுவொன்றின் பல உறுப்பினர்களை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது.

பதான்கோட் படை முகாம் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, பதான்கோட் படை முகாம் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-மொஹமத் எனும் அந்த அமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிட்டு சோதனைகளை நடத்தியுள்ள அதிகாரிகள், அவற்றை இழுத்து மூடியுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு காரணமாவர்கள் எனத் தாங்கள் நம்பும் அமைப்பின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டு என இந்தியா பாகிஸ்தானை வலியுறுத்தியதை அடுத்து, இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

பதான்கோட் விமானப் படைத் தளம் இந்தியப் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது

பட மூலாதாரம், epa

படக்குறிப்பு, பதான்கோட் விமானப் படைத் தளம் இந்தியப் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது

பதான்கோட்டிலுள்ள அந்த விமானப் படைத் தளத்தின் மீது நடைபெற்ற தாக்குதலில் இந்தியப் பாதுகாப்படையினர் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

இருநாடுகளுக்கும் இடையே மிக நீண்டகாலாமாக முறிந்து போயிருந்த உறவுகளை மேம்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளை குலைப்பதாக இந்தத் தாக்குதல் நடவடிக்கை பார்க்கப்படுகிறது.