தான் ஒருபால் உறவாளர் என்பதை வத்திகானில் வெளிப்படுத்திய பாதிரியார்

பட மூலாதாரம், EPA
வத்திகானில் மூத்த பாதிரியார் ஒருவர், தான் ஒருபால் உறவாளர் என்றும் ஏற்கனவே உறவொன்றில் இருந்துவருவதாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.
நூற்றுக்கணக்கான ரோமன் கத்தோலிக்க ஆயர்கள், வத்திகானின் குடும்பம் பற்றிய உயர்மட்ட கவுன்சிலின் அமர்வில் கலந்துகொள்ள ஒருநாள் உள்ள நிலையில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
போலந்து நாட்டவரான கிறிஸ்டோவ் ஓலாஃப் சராம்ஸா என்ற அந்தப் பாதிரியார் இனிமேலும் கத்தோலிக்க திருச்சபை கோட்பாடுகளை பாதுகாக்கின்ற உயர் அவையின் உறுப்பினராக நீடிக்க முடியாது என்று வத்திகானின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒருபாலுறவு தொடர்பில் கத்தோலிக்கத் திருச்சபை கொண்டுள்ள நிலைப்பாடானது பிற்போக்குத் தனமானது என்று அருட்தந்தை சாராம்ஸா கூறியுள்ளார்.
ஒருபாலுறவாளர்களான ஆண்களையும் பெண்களையும் திருச்சபை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர்களை தொடர்ந்தும் நிராகரிக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








