சிறார் துஷ்பிரயோகம்: வாட்டிகனில் வெடிக்கும் மோதல்

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையகத்தில் நிதித்துறைக்கு பொறுப்பான அதிகாரி தன் மீது திருச்சபையின் சிறார்கள் பாதுகாப்புக்கான அணையர் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் கத்தோலிக்கத் திருச்சபையினர் மீதான குற்றச்சாட்டுகள் தொடருகின்றன

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் கத்தோலிக்கத் திருச்சபையினர் மீதான குற்றச்சாட்டுகள் தொடருகின்றன

அத்திருச்சபையின் சிறார்கள் நலனுக்கான ஆணையர் பீட்டர் சாண்டர்ஸ், நிதித்துறைக்கு பொறுப்பானவரான கார்டினல் ஜார்ஜ் பெல் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

ஆஸ்திரேலியாவிலுள்ள கத்தோலிக்கத் திருச்சபைகளின் முன்னாள் தலைவரான கார்டினல் ஜார்ஜ் பெல் இருந்தார்.

திருச்சபையில் சிறார்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டபோது சமூகச் சிந்தனையற்று, ஈவு இரக்கமின்றி, அக்கரை காட்டாமல் அவர் இருந்தார் என அவர் மீது நிதித்துறை தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போப் பிரான்ஸிஸ் ஏற்கனவே கூறியுள்ளார்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போப் பிரான்ஸிஸ் ஏற்கனவே கூறியுள்ளார்.

கார்டினல் பெல்லின் எண்ணப் போக்கு பாதிக்கப்பட்டவர்களை இழிவு படுத்தும் வகையில் இருந்தது என்றும், அவர் தமது பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் சாண்டர்ஸ் கோரியுள்ளார்.

ஆனால் தம்மீதான கருத்துக்கள் உண்மையற்றவை, அராஜகமானவை என கார்டினல் பெல் கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவில் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, சிறார்களை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு அளித்தார் எனும் குற்றச்சாட்டையும், பாதிக்கப்பட்ட ஒரு நபரை வாயடைக்கச் செய்யும் வகையில் அவருக்கு பணம் வழங்கினார் என்று கூறப்படுவதையும் அவர் முன்னரே மறுத்திருந்தார்.