வங்கதேசத்தில் பள்ளிகளில் நீச்சல் பயிற்சி கட்டாயம்

பட மூலாதாரம், focus bangla
அரசு பள்ளி மாணவர்கள் கட்டாயம் நீச்சல் கற்கவேண்டும் என்ற விதியை வங்கதேச அரசு கொண்டுவந்துள்ளது. நாட்டில் ஒடும் நதிகளில் பல குழந்தைகள் விழுந்து இறக்கும் நிலையில், இந்த மரணங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.
ஆண்டுக்கு 18000 பேர் வங்கதேசத்தில் நீரில் முழ்கி இறப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கான நீச்சல் பயிற்சி அளிப்பதற்கு வசதியாக ஊரகப் பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் போன்றவை சுத்தப்படுதப்பட்டு மேம்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தள்ளது. நகரங்களில் உள்ள பள்ளிக் கூடங்கள், பல்கலைக் கழகங்களில் உள்ள நீச்சல் குளங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் மிகக் குறைந்த அளவு நீச்சல் குளங்களே உள்ளதால் இந்த முடிவை அமல்படுத்துவது கடினம் என்று பிபிசியின் வங்க மொழிப் பிரிவின் ஆசிரியர் தெரிவிக்கிறார்.








