BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

ரிஷி சூனக்-கமலா

பட மூலாதாரம், Reuters

வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.அந்த வகையில் இந்த வாரம், 'பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளில் தலைமை வகிக்கும் இந்திய வம்சாவளியினர், இந்திய கிரிக்கெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஆண்-பெண் சம ஊதிய விவகாரம், உலகின் மிக அழுக்கான நபர் என்று சொல்லப்பட்ட முதியவரின் மரணம், 50 வயது பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு மற்றும் நயன்தாரா விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையின் விவரங்கள்' என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

8 நாடுகளின் தலைமையில் இந்திய வம்சாவளியினர்

கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கமலா ஹாரிஸ்

உலகின் பல நாடுகளில் முன்னணித் தலைவர்களாகத் தொடரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்ற தலைவர்களைப் பற்றி பலரும் பேசுகிறார்கள்.

தற்போது, ​​இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைவர்கள் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஆஃப்ரிக்கா மற்றும் ஆசியாவின் பல நாடுகளில் முக்கிய பதவிகளில் உள்ளனர். பிரிட்டனுடன் சேர்த்து மற்ற ஏழு நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் இந்திய வம்சாவளி தலைவர்களைப் பற்றி இந்த இணைப்பில் தெரிந்து கொள்வோம்.

இனி பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியம் எவ்வளவு?

பெண் கிரிக்கெட் வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images

"இந்திய கிரிக்கெட் அணியில் பெண் வீராங்கனைகளுக்கும் ஆண் வீரர்களுக்கு நிகரான சம்பளம் வழங்கப்படும்" என அறிவித்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜெய் ஷா. வாரியத்தின் அறிவிப்பை பெண் வீராங்கனைகளும் பிறரும் வரவேற்றுள்ளனர். இந்த அறிவிப்பால் இருபாலருக்கும் சம வருவாய் கிடைக்குமா? விரிவாகத் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் படிக்கலாம்.

குளிக்காமல் வாழ்ந்தவர் குளித்த பின் மரணம்

அமோ ஹாஜி

பட மூலாதாரம், AFP

''உலகிலேயே அழுக்கான மனிதர்'' என்று ஊடகங்களால் கூறப்பட்ட ஓர் இரானிய தாத்தா தமது 94 வயதில் மரணமடைந்துள்ளார். பல்லாண்டுகளாக குளிக்காமல் இருந்த இவர் குளித்த சில மாதங்களிலேயே இறந்துள்ளார்.

யார் இவர்? ஏன் இப்படி இருந்தார்? என்பன உள்ளிட்ட விவரங்களை இந்த இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.

50 வயது பெண்ணை அப்டியே விழுங்கிய மலைப்பாம்பு

மலைப்பாம்பு

பட மூலாதாரம், Getty Images

இந்தோனீசியாவின் ஜம்பி மாகாணத்தில் பெண் ஒருவரை மலைப்பாம்பு ஒன்று கொன்று விழுங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் அரிதாக நடந்தாலும், இந்தோனீசியாவில் ஒருவர் மலைப்பாம்பால் விழுங்கப்பட்டு உயிரிழப்பது இது முதல் முறையல்ல. 2017 - 2018 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும், இதே போன்ற இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்தப் பெண் இறப்பு விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை இந்த இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.

"நயன் - விக்கி திருமணம் 2016லேயே நடந்துவிட்டது"

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

பட மூலாதாரம், WIKKIOFFICIAL INSTAGRAM

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு சமீபத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் விவகாரத்தில் அவர்கள் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருப்பது தற்போது விசாரணை அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையின் விவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது.

அறிக்கையின் முக்கியமான அம்சங்களை இந்த இணைப்பில் படியுங்கள்.

Banner
காணொளிக் குறிப்பு, ஈலோன் மஸ்க் ட்விட்டர் அலுவலகத்துக்குள் நுழைந்த முதல் நாளில் செய்தது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: