துபாய் சுட்டிக்குழந்தையின் குறும்பு: மருத்துவரின் மாஸ்கை கழற்றும் படம் வைரல்

பட மூலாதாரம், DR SAMERCHEAIB INSTAGRAM
துபையில் பிறந்த குழந்தையை மருத்துவர் தூக்கிப்பிடித்து புகைப்படத்துக்கு காட்சி கொடுத்தபோது, அழும் அந்த சுட்டிக்குழந்தை மருத்துவரின் முக கவசத்தை பிடுங்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
2020ஆம் ஆண்டை கொரோனா பெருந்தொற்று உலக அளவில் புரட்டிப்போட்ட நிலையில், அதன் விளைவால் அமலில் உள்ள கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் போன்றவற்றுக்கு மத்தியில் முக கவசத்தை பிடுங்கும் சுட்டிக்குழந்தையின் செயல், விரைவில் இயல்புநிலைக்கு உலகம் திரும்ப வேண்டும் என்பதை புதிய வரவு (குழந்தை) உணர்த்துவது போல பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
எதிர்கால உலகின் அவசியம், முக கவசமில்லாத வாழ்க்கை என்பதை இந்த பிஞ்சுக் குழந்தை உணர்த்துகிறது என்று சிலர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு
இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை. ஆனாலும், அதில் இடம்பெற்ற மருத்துவர் சமீர் சியெய்ப் ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்தவர் என்பதும் இந்த குழந்தையின் படத்தை அவரே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.
அந்த படத்தின் குறிப்பில், விரைவில் நாம் எல்லோரும் முக கவசத்தை கழற்றப்போகிறோம் என்பதன் அறிகுறியே இது என்று மருத்துவர் சமீர் சியெய்ப் கூறியுள்ளார்.
இந்த படத்தை பார்த்த சமூக ஊடக பயனர்கள் அதற்கு ஆயிரக்கணக்கில் லைக் கொடுத்து வருகின்றனர். பலர் இதை 2020ஆம் ஆண்டின் எதிர்கால அடையாளம் என அழைக்கிறார்கள்.
ஒரு பயனர், இது நிச்சயமாக 2020ஆம் ஆண்டின் சிறந்த படமாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- "அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்" - சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்
- தாய்லாந்து போராட்டங்கள்: பாங்காங்கில் காவலர்களுடன் மோதும் போராட்டக்காரர்கள் - என்ன நடக்கிறது?
- கொரோனா வைரஸ்: சீன பொருளாதாரம் மட்டும் வேகமாக மீண்டெழுவது எப்படி?
- "அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரின் ஒழுங்கீன நடவடிக்கை தவறானது" - தமிழக சட்ட அமைச்சர்
- கலாமை அமைச்சராக்க விரும்பிய வாஜ்பேயி; பதவி விலகலை தடுத்த மன்மோகன்
- ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி: ஆட்டத்தின் போக்கை மாற்றிய கடைசி 5 ஓவர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












