ஆஸ்திரேலியா: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து இலவசம் - 2021ஆம் ஆண்டு வழங்க அரசு ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images
இரு நம்பிக்கை தரும் சோதனை முயற்சிகள் வெற்றி பெற்றால் 85 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளைப் பெற இயலும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இரு ஒப்பந்தங்கள்
தடுப்பு மருந்துகளின் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டால் 2021ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கக்கூடிய இரு ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இதன் மதிப்பு 1.24 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மோரிசன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்கள் ஜனவரி மாதத்தில் இந்த தடுப்பு மருந்துகளைப் பெறுவர்.
ஆனால் அதற்கான உறுதி அளிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
"இருப்பினும் நமது மருத்துவ நிபுணர்கள் அந்த தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கினால் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் இருக்கும்," என மோரிசன் தெரிவித்துள்ளார்.


மருத்துவ பரிசோதனை
குவின்ஸ்லாந்து பல்கலைக்கழக தடுப்பு மருந்து முதல் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. சிறு குழுக்கள் மீது அந்த தடுப்பு மருந்து சோதனை நடைபெற்று வருகிறது.
95 சதவீத தடுப்பு மருந்து விகிதத்தை இலக்காகக் கொண்டுள்ளது ஆஸ்திரேலியா.
மேலும் தங்கள் நாட்டிற்கு மட்டுமல்லாமல் தங்களின் அண்டை பகுதிகளான பசிபிக் மற்றும் தென் கிழக்கு ஆசியாவிற்கும் தடுப்பு மருந்து கிடைப்பதை உறுதி செய்யும் என மோரிசன் தெரிவித்துள்ளார்.
உலகமுழுவதும் கொரோனாவிற்கு தடுப்பு மருந்திற்கான ஒப்பந்தம் நோக்கி தீவிரமாக செயல்பட்டு வரும் வேளையில், ஏழை நாடுகளுக்கு தடுப்பு மருந்து கிடைக்காமல் போக நேரிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
ஜூலை மாதம், வளமிக்க நாடுகள், ஏழை நாடுகளுக்குத் தடுப்பு மருந்து கிடைக்க நிதி உதவி செய்ய 165 நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சுமார் 140 தடுப்பு மருந்துகள் உலக அளவில் ஆரம்பக் கட்ட பரிசோதனை நிலையில் உள்ளன. மேலும் டஜன் கணக்கான தடுப்பு மருந்துகள் மருத்துவ பரிசோதனை நிலையில் உள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












