#HowdyModi: 'என் குடும்பத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்' - டிரம்பிடம் கூறிய மோதி

பட மூலாதாரம், Ani
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளும் 'ஹௌடி மோடி' நிகழ்ச்சி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் தொடங்கியுள்ளது.
இந்திய நேரப்படி இரவு சுமார் 9.30 மணிக்கு நரேந்திர மோதி மேடைக்கு வந்தார். அவருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் ஒரு மணி நேரம் கழித்தே டிரம்ப் அங்கு வந்தார். அப்போது உள்ளூர் நேரப்படி நற்பகல் ஆகியிருந்தது.
இந்த நிகழ்வில் நரேந்திர மோதி பேசத் தொடங்கியபோது உள்ளூர் நேரப்படி 12.15 மணி ஆகியிருந்தது.
"காலை வணக்கம் ஹூஸ்டன். காலை வணக்கம் டெக்சாஸ். காலை வணக்கம் அமெரிக்கா என்று தனது உரையை நரேந்திர மோதி தொடங்கினார்.

பட மூலாதாரம், Getty Images
"இந்தியாவில் இது ஒரு ஞாயிறு பின்னிரவு என்றாலும் கோடிக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வை தொலைக்காட்சி மூலம் பார்த்துக்கொண்டுள்ளனர்," என்று கூறிய மோதி, டிரம்பை நோக்கி "அதிபர் அவர்களே 2017இல் உங்கள் குடும்பத்தை எனக்கு அறிமுகம் செய்தீர்கள். இப்போது நான் என் குடும்பத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். அதில் 100 கோடிக்கும் மேலானவர்கள் இருக்கிறார்கள்," என்று கூறினார்.
"ஒரு சிறப்பான நபர் இன்று நம்மிடையே உள்ளார். அவர் இந்த புவியின் அரசியலை தீர்மானிக்கும் நிலையில் உள்ளார். அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கிறது. அவரைச் சந்திக்கும்போதெல்லாம் எனக்கு உற்சாகம் பிறக்கிறது," என்று கூறினார்.
கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமது அரசு கடந்த ஆறு ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் செய்த சாதனைகள் குறித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் முன்னிலையில் மோதி பேசினார்.
பிரதமர் மோதி அமெரிக்காவுக்கு மிகவும் நம்பகமான மற்றும் உண்மையான நண்பனாக உள்ளார் என்று தமது உரையில் கூறிய டிரம்ப், சமீபத்தில் இந்தியாவில் நடந்த உலகின் மிகப்பெரிய தேர்தலில் 600 மில்லியன் மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்தவர் மோதி என்றார்.
சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மோதிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். நம் இரு நாடுகளின் அரசியலமைப்பும் 'We the people' எனும் மூன்று அழகிய சொற்களைக் கொண்டே தொடங்குகின்றன என்று டிரம்ப் அப்போது பேசினார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
கடந்த 10 ஆண்டுகளில் 30 கோடி மக்களை வறுமையில் இருந்து இந்தியா மீட்டுள்ளது அளப்பரியது என்று டிரம்ப் பேசினார்.
மோதியின் ஏழு நாள் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் முக்கியமான பேசுபொருளாக ஆகியுள்ளது, 'டெக்சாஸ் இந்தியா ஃபோரம்' எனும் அமைப்பின் பெயரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
ஹூஸ்டனின் என்.ஆர்.ஜி உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் 'ஹௌடி மோடி' நிகழ்வில் சுமார் 50,000 பேர் பங்கேற்கின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதால் இது கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.

பட மூலாதாரம், Ani
வெளிநாட்டுத் தலைவர் ஒருவரது வருகைக்கு கூடிய மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இந்தியப் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்வுகளும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன. 400 கலைஞர்கள் இவற்றை நிகழ்த்தினர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
காந்தி போல வேடமிட்டுக்கொண்டு இந்த நிகழ்வுக்கு வந்திருந்த ரமேஷ் மோதி என்பவர், நரேந்திர மோதி, காந்தி ஆகிய இருவருமே ஒன்றுதான். அவர்கள் இருவருமே துறவிகள், சாதுக்கள். மோதியை இந்த நகருக்கு வரவேற்கிறேன் என்று கூறியதாக ஏ.என்.ஐ. ட்விட்டர் செய்தி தெரிவிக்கிறது.

மோதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 'ஹிந்துஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ்,' காஷ்மீர் மற்றும் காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவு அமைப்புகள், இந்திய - அமெரிக்க இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மோதியின் 'ஹௌடி மோடி!' நிகழ்ச்சி நடைபெறும் என்.ஆர்.ஜி உள்விளையாட்டு அரங்கை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ள நிலையில் மோதிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
முன்னதாக ஹூஸ்டனில் நரேந்திர மோதியை சந்தித்த காஷ்மீர் பண்டிட் சமூகத்தைத் சேர்ந்த சிலர் காஷ்மீர் குறித்து இந்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
என் நண்பருடன் ஹூஸ்டனில் இருப்பேன். டெக்சாஸில் மிகச்சிறந்த நாளாக இருக்கப்போகிறது," என்று டொனல்டு டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
மோதி மற்றும் டிரம்ப் இடையே என்ன மாதிரியான உரையாடல் நிகழ உள்ளது என்று எனக்கு தெரியாது. அதிபரால் எதாவது அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டால் அது எனக்கு வியப்பாக இருக்காது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தக ரீதியான கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன் என்று டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர் ஜான் கார்னின் கூறியுள்ளார் என ஏ.என்.ஐ செய்தி தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












