பண பரிவர்த்தனை வழக்கில் சிம்பன்சி குரங்குகளை கைப்பற்றிய விநோதம் - அமலாக்கத் துறை நடவடிக்கை

பட மூலாதாரம், Getty Images
மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாகப் பணப் பரிமாற்றம் செய்த வழக்கு ஒன்றில், மூன்று சிம்பன்சி குரங்குளையும், நான்கு 'மர்மோசெட்' எனப்படும் தென் அமெரிக்காவை பூர்விகமாகக் கொண்ட நீள வால் குரங்குளையும் இந்திய அமலாக்கத் துறை கையகப்படுத்தியுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவை கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் விலங்கியல் பூங்காவில் இருந்தன. அவை மேற்கொண்டு அந்தப் பூங்காவிலேயே வைத்துக்கொள்ள பூங்கா அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
அந்த குரங்குகளைக் காண பார்வையாளர்கள் அதிகம் வருவதால் அந்த விலங்கியல் பூங்காவுக்கு வருவாய் அதிகரித்துள்ளதாக பி.டி.ஐ செய்தி கூறுகிறது.
அந்த ஏழு விலங்குகளின் மதிப்பும் ரூபாய் 81 லட்சம் என்று கணிக்கப்பட்டுள்ளது. சிம்பன்சி குரங்குகளுக்கு தல 25 லட்சம் இந்திய ரூபாயும், மர்மோசெட் குரங்குகளுக்கு தலா 1.5 லட்சம் இந்திய ரூபாயும் விலை மதிப்பு கணிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
சுப்ரதீப் குகா எனும் நபர் மேற்கு வங்க வனத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்ததாக போலியான ஆவணங்களைத் தயாரித்து, சட்டவிரோதமாக காட்டில் வாழும் பறவைகளை இடம் மாற்றியதாக அந்த மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
பின்னர், மேற்கு வாங்க காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான அந்த வழக்கின் விசாரணையை அமலாக்கத் துறை ஏற்றது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சுப்ரதீப் குப்தா வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக விலங்குகளை கொண்டு வந்து விற்பனை செய்வது தெரியவந்தது.
சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரின் சொத்துகளை முடக்கவும், கைப்பற்றவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உண்டு.
அதன்படி குப்தா கடத்தி வைத்திருந்த விலங்குகளை அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
அந்த சிம்பன்சி குரங்குகள் இந்தியாவில் பிறந்ததாக குப்தா போலியான ஆவணங்களை வைத்திருந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது என பி.டி.ஐ செய்தி தெரிவிக்கிறது.












