பிரிட்டன் கோமகள் மெகன் மார்கில் ஆண் குழந்தைக்கு தாயானார்

பட மூலாதாரம், Getty Images
தனது மனைவியான கோமகள் மெகன் மார்கில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் என எலிசபெத் ராணியின் பேரனான இளவரசர் ஹாரி அறிவித்துள்ளார்.
குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதென்றும், இது தமக்கு பேரனுபவம் என்றும் ஹாரி கூறி உள்ளார்.
குழந்தைக்கு என்ன பெயர் வைப்பதென தாங்கள் யோசித்து வருவதாக ஹாரி மேலும் தெரிவித்தார்.
வீட்டில் குழந்தை பெற்றெடுக்கதான் கோமகள் விரும்பியதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், பிரசவம் எங்கு நடந்ததென இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
திருமணம்
லண்டனுக்கு அருகேயுள்ள வின்ஸ்டர் என்ற இடத்தில்தான் ஹாரி மற்றும் மெகனின் திருமணம் கடந்தாண்டு மே 19 நடைபெற்றது.

இதை பார்ப்பதற்காக சுமார் 1 லட்சம் பேர் திரண்டனர்
பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, பிரிட்டனுக்கான அமெரிக்க தூதர் மற்றும் உலக நாடுகளின் தலைவர் தங்களது வாழ்த்துகளை இளவரசர் ஹாரி மற்றும் மெகனுக்கு தெரிவித்து இருந்தனர்.
இந்திய பெண்
சிலருக்கு மட்டுமே இந்த திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தியாவை சேர்ந்த சுஹானி ஜலோடாவுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
சுஹானி ஜலோடா இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் வசிக்கிறார். சுஹானி ஜலோடா இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் இருக்கிறார்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுஹானியும் மும்பையில் குடிசை பகுதியில் இருக்கும் சில பெண்களும் இணைந்து `மைனா மஹிளா' எனும் அரசுசாரா அமைப்பை தோற்றுவித்தனர். இந்த அமைப்பின் நோக்கம் மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
இவரை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கும் அப்போது திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












