ஜப்பான்: ஜெபி சூறாவளி தாக்குதலில் 10 பேர் பலி

ஜப்பான்: கடும் சூறாவளி தாக்குதலில் 7 பேர் பலி

பட மூலாதாரம், KYODO/VIA REUTERS

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக சக்திவாய்ந்த சூறாவளியொன்று ஜப்பானை தாக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சூறாவளி தாக்குதலில் 200 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜப்பானின் மேற்கு பகுதியில் கரையை கடந்த ஜெபி என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளி மணிக்கு 172 கி.மீட்டர் வேகத்தில் வீசியதாகவும், அதனால் மிக பயங்கர மழை பெய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மிக பெரிய அலைகள் வீசிவரும் நிலையில், கடும் வெள்ளம் மற்றும் மண் சரிவு குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

ஜப்பானை தாக்கிய கடும் சூறாவளி

பட மூலாதாரம், AFP PHOTO / KAGAWA PREFECTURAL POLI

இந்த சூறாவளியால் பல ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வீடுகளில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமையன்று உள்ளூர் நேரப்படி பகல் 12 மணி அளவில் ஷிகோகோ தீவில் இந்த சூறாவளி கரையை கடந்தது. பின்னர், இந்த சூறாவளி ஜப்பானின் மிகப்பெரிய தீவான ஹான்ஷுவை நோக்கி முன்னேறியுள்ளது.

வட திசையில் முன்னேறியுள்ளதால், இனி இந்த சூறாவளி வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

''மிகவும் சக்திவாய்ந்தது'' என்று ஜப்பான் நாட்டின் வானிலை மையத்தால் முதன்முதலில் வகைப்படுத்தப்பட்ட ஜெபி சூறாவளி, 1993-ஆம் ஆண்டில் ஜப்பானின் முக்கிய தீவுகளை தாக்கி 48 பேர் இறக்க காரணமான சூறாவளிக்கு பிறகு சீற்றம் அதிகமுள்ளதாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பான்: கடும் சூறாவளி தாக்குதலில் 7 பேர் பலி

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

சூறாவளி பாதிப்பால் நாட்டில் நூற்றக்கணக்கான விமான, ரயில் மற்றும் படகு சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒசாகாவில் உள்ள கான்சாய் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :