பெண்களை சிறுமைப்படுத்திப் பாடும் திடீர் நடனத்தில் நீங்கள் பங்கேற்பீ்ர்களா?

    • எழுதியவர், திவ்யா ஆர்யா
    • பதவி, பிபிசி

உங்களுக்கு மிகவும் வசதியான, உங்கள் வீட்டில் இருந்து, வெளியே வந்து பொதுவெளியில் திடீரென கூடி, குழுவாக நடனமாடும் நிகழ்வில் பங்கேற்க எது தூண்டுதலாக இருக்கும் ? பதிலளிப்பதற்கு முன்பு சிந்தியுங்கள்.

ஒரு பாடலில் உள்ள வரிகளை பாடி, பாடகருக்கு ஆதரவை அளிக்க கூடிய திடீர் கூட்டமாக இருந்தால் நீங்கள் போவீர்களா ?

அந்த பாடல், அக்கம்பக்கத்து வீட்டில் உள்ள வயதான ஒரு பெண்ணுடன் செக்ஸ் கொள்வது குறித்து இருந்தால், நீங்கள் அந்தக் கூட்டத்தில் ஒருவராக மாறுவீர்களா?

அந்த பாடல், பெண்களை புறநிலைப்படுத்தி, வலுக்கட்டாயமான செக்ஸை ஊக்குவிப்பது மட்டுமின்றி, தூண்டிவிடும் வகையில் அந்தப் பெண் உள்ளார் என அவர் மீது பழி போடும் வகையில் இருந்தால் அதில் கலந்து கொள்ளச் செல்வீர்களா?

சமூக ஊடகங்களில், பெயரில்லாமல் ஒருவரை கிண்டல் செய்வது போல இல்லாமல், ஃபிளாஷ் மாப் என்பது, அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய நிஜ மனிதர்களை கொண்டு செய்வது என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்.

இந்த ஆண்களும், பெண்களும், `சொல்லுங்கள் ஆண்டி, உங்கள் வீடு வாசல் மணியை அடிக்கலாமா?` (tell me aunty should I come ring your bell?) என்ற பாடலுக்கு நடனமாட மனசாட்சி இல்லாமல் வந்துள்ளனர்.

இந்த பாடல் முழுவதும், பாடகர், அக்கம்பக்கத்து வீட்டு வயதான பெண்ணை என்ன செய்ய நினைக்கிறார் என்பதை விளக்கும் பாலியல் வன்முறைகள் கொண்டதாக உள்ளது.

மேலும், இந்த பாடல், அந்த பெண்மணி, குட்டையான உடை அணிபவர் என்றும், தந்தையின் பணத்தை செலவு செய்பவர் என்றும், `தினமும் பத்து ஆண்களுடன் செக்ஸ் வைத்துகொள்ளும் பழக்கமுள்ளவர் ` என்ற வரிகளை கொண்டுள்ளது.

இதை தான், அகராதிகள், பெண்களை வெறுக்கும் வரிகள் என்றும், விருப்பத்திற்கு எதிரான , கண்டனத்திற்குரிய , பெண்களுக்கு எதிரான ஆழமான தப்பெண்ணம் கொண்டது எனக்கூறும்.

இதை அனைவரும் எதிர்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிவதோடு, இந்த பாடலை யூடியூபில் இதுவரை 30 இலட்சம் மக்கள் பார்த்துள்ளனர்.

யூடியூப் இந்த பாடலை நீக்கி விட்டாலும், பலரும் இந்த பாடலை பகிர்ந்துள்ளதால், இதை மிக எளிதாக சமூக வலைதளங்களில் காணமுடிகிறது.

அதுமட்டுமில்லாமல், முகநூல் பக்கங்களில், நாடுமுழுவதும், பிரபல அரங்கங்களிலும், கல்லூரிகளுக்கு வெளியேயும் இந்த பாடலுக்கான ஃபிளாஷ் மாப் நிகழ்ச்சிகளுக்கான அறிவிப்புகள் உள்ளன.

நான், இரண்டு குழுக்களில் ஃபிளாஷ் மாப் காணொளியை பார்த்தேன்.

அவர்கள் ஆக்ரோஷமாக உள்ளனர். அதை அவர்கள் ரசிக்கின்றனர். அதற்கு வெட்கப்படவில்லை.

அவர்கள் என்ன பாடுகிறார்கள் என்பதை அறியாமல் இருப்பதுதான் இதற்கு காரணமா?

குழுவில் ஆடும் ஆண்களின் இடுப்பு அசைவுகள் அவ்வாறு கூறவில்லை.

அல்லது அவர்கள் அதை பாதிப்பில்லாத வேடிக்கை என எண்ணுகிறார்களா?

`பாதிப்பில்லாத வேடிக்கை` - அது கிட்டத்தட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கிறது.

அவர்கள் ஆர்வமாக, உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக , பாலியல் ரீதியான வார்த்தைகளை பொதுவெளியில் பயன்படுத்துகிறார்கள்.

மேலும், அந்த ஃபிளாஷ் மாப் குழுக்களில் பெண்களும் உள்ளனர்.

ஆண்களுக்கு இணையாக அவர்களுடன் சேர்ந்து பாடிக்கொண்டு, சிரித்துக்கொண்டு , மகிழ்கின்றனர்.

யார் இந்த இளம் ஆண் மற்றும் பெண்கள் ?

சாலைகளிலோ அல்லது சமூக தளங்களிலோ , இது போன்ற குழுக்கள், எந்த வகையில் வித்தியாசப்படுகிறார்கள்?

இது குறித்து விமர்சித்த ஒரு பத்திரிக்கையாளருக்கு, அவரின் சமூக தளங்களில், பாலியல் வன்புணர்வுக்கான மிரட்டல்கள் வந்ததுடன், அவரின் தொலைபேசிக்கு கொலை மிரட்டல் செய்திகளும் வந்துள்ளன.

அந்த விமர்சனங்கள் மிக புத்திசாலித்தனமாகவும், வன்மமாகவும் இருந்ததால், அந்த செய்தி நிறுவனம் தங்களின் செய்தியாளருக்கு எந்த பாதிப்பு இல்லாமல் பார்த்துகொள்ள, செய்தி தொகுப்பின் ஒலிபரப்பை நிறுத்தியது.

`பாதிப்பில்லாத வேட்டிக்கைகள்` எப்போது மிரட்டல்கள் ஆனது?

பாலிவுட் திரைப்படங்கள் முழுவதும், பாலியல் ரீதியான அவமதிப்புகள், விடாமல் பின்தொடர்பவர்களை பெருமையாக காட்டுவதும், பெண்களின் சம்மதத்தை கேலி செய்வதுமாகவே நிறைந்துள்ளது.

பிறகு ஏன் பெயர் தெரியாத ஒரு பாடகரின் மேலும் ஒரு பாடல் என்னை வருத்தமடைய வைக்கிறது?

மேலும், ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் ஏன் வீட்டைவிட்டு வெளியே வந்து இந்த பாடலுக்கு நடனமாட வருகின்றனர்?

அந்த பாடகர் என்னை வருத்தமடைய செய்யவில்லை. அந்த நடனக்குழு தான் செய்கிறது.

அதற்கான வரம்பு எங்கே? அதை யார் போடுவது மேலும், அது தாண்டப்பட்டுள்ளது என்பதை யார் முடிவு செய்வது?

பேச்சு சுதந்திரம் எப்போது ஆக்ரோஷத்திற்கான உரிமமாக என்று மாறியது என்பதை தான் நான் வியந்து யோசிக்கிறேன்.

அந்த பாடகர் என்னை வருத்தமடைய செய்யவில்லை. அந்த நடனக்குழு தான் செய்கிறது.

அந்த நடனக்குழு உரக்க கத்துவதை கேட்க மறுப்பதும், அவர்கள் பதிவிடுவதை பார்க்க மறுப்பதும் அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை பார்க்க மறுப்பதும்.

சமூக ஊடகங்களுக்கு சென்று வெறுப்பை உமிழும் , இந்தியாவின் பெருநகரங்களில் வாழும் ஆண்களும் பெண்களும் தற்போது, பெண்களை வெறுக்கும் முறையை ஆதரிக்கும் ஊக்கத்தை கண்டறிந்துவிட்டனர்.

இத்தகைய ஒரு நடனக்குழுவில் நீங்கள் பங்கெடுப்பீர்களா?

பதிலளிப்பதற்கு முன்பு சிந்தியுங்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :