புகைப்படங்களில் இந்த வாரம்: 26 ஆகஸ்ட் - 1 செப்டம்பர்

கடந்த வார நிகழ்வுகளின் சிறந்த புகைப்படங்களில் சிலவற்றை செய்திக் குறிப்போடு உங்களுக்குத் தொகுத்து வழங்குகிறோம்.

20வது ஆண்டு நினைவு நாளில் இளவரசி டயானாவின் மாளிகை வாசலில் மலரஞ்சலி

பட மூலாதாரம், Hannah McKay/Reuters

படக்குறிப்பு, இங்கிலாந்து இளவரசி டயனாவின் 20ஆவது ஆண்டு நினைவு தினத்தில் பொது மக்கள் அவர் குடியிருந்த மாளிகை முன் மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
லண்டனின் மேற்கு பகுதியிலுள்ள நாட்டிங் ஹில்லில், ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின் கடைசி நாளான ஆகஸ்ட் 17 ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பல்வண்ண ஆடைகளுடன் திரண்டனர்.

பட மூலாதாரம், TOLGA AKMEN/afp

படக்குறிப்பு, லண்டனின் மேற்கு பகுதியிலுள்ள நாட்டிங் ஹில்லில், ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின் கடைசி நாளான ஆகஸ்ட் 17 ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பல்வண்ண ஆடைகளுடன் திரண்டனர்.
50 சண்டைகளில் தோல்வியை தழுவாதவர் என்று பெருமைக்கு சொந்தக்காரரான குத்துச்சண்டை வீரர் ஃபிலாய்ட் மேவேவேர்.

பட மூலாதாரம், Christian Petersen/Getty Images

படக்குறிப்பு, குத்துச்சண்டை வரலாற்றிலேயே சிறந்தது என்று சொல்லத்தக்க ஒரு போட்டியில் 10ஆவது சுற்றில் கோநோர் மெக்கிரகோரை வீழ்த்தியதன் மூலம், 50 போட்டிகளில் தோல்வியைத் தழுவாதவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் குத்துச்சண்டை வீரர் ஃபிலாய்ட் மேவெதர்.
ஸ்பெயினில் தக்காளி திருவிழா

பட மூலாதாரம், Pablo Blazquez Dominguez/Getty Images

படக்குறிப்பு, ஸ்பெயினின் சிறிய நகரான புனோனில் ஆண்டுதோறும் நடைபெறும் தக்காளி விழாவில் உலக நாடுகளை சேர்ந்த மக்கள் கூடி ஒருவர் மீது ஒருவர் தக்காளி வீசி மகிழ்ந்தனர். 1945 ஆம் ஆண்டு நடைபெற்ற உணவு சண்டை ஒன்றே இந்நிகழ்வுக்கான தொடக்கம்.
இஸ்லாமியரின் புனித இடமான மெக்கா கிராண்ட் மசூதியில் காபாவை சுற்றி வந்து புனித பயணத்தை தொடங்கியுள்ளனர்.

பட மூலாதாரம், KARIM SAHIB/afp

படக்குறிப்பு, ஆண்டுதோறும் சௌதி அரேபியாவுக்கு செல்லும் ஹஜ் புனிதப் பயணத்தை உலக நாடுகளிலுள்ள சுமார் 2 மில்லியன் முஸ்லிம்கள் தொடங்கியுள்ளனர். புதன்கிழமை சூரியன் மறைந்த பின்னர் இஸ்லாமியரின் புனிதத் தலமான மெக்கா கிராண்ட் மசூதியில் உள்ள காபாவை சுற்றி யாத்ரீகர்கள் சுற்றத் தொடங்கினர்.
ஷிபரி கயிறு காட்சியில் அரங்கேற்றம் நடத்தும் 'பேர்னிங் மேன்' கலைஞர்கள்

பட மூலாதாரம், Jim Bourg/REUTERS

படக்குறிப்பு, புயலுக்கு நடுவே கலை: நிவாடாவிலுள்ள பிளாக் ராக் பாலைவனத்தில் ஷேன் பிட்சர் என்பவர் ஏற்பாடு செய்த கலை மற்றும் இசை விழாவின்போது ஒரு பாலைவனத் தூசிப் புயல் வீசியது. அப்போது நடைபெற்ற 'ஷிபரி கயிறு காட்சி' எனப்படும் ஒரு கலை நிகழ்ச்சி.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் 'ல விற்றா பெல்லா' முதியோர் பராமரிப்பு இல்லத்தில் குடியிருந்த அனைவரும் மீட்கப்பட்டனர்

பட மூலாதாரம், Trudy Lampson via Reuters

படக்குறிப்பு, புயலால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் 'ல விடா பெல்லா' முதியோர் பராமரிப்பு இல்லத்தில் முதியோர் வெள்ளப்பெருக்கில் சிக்கியிருக்கும் இப்புகைப்படம் சமூக ஊடகங்களில் பெருமளவு பகிரப்பட்ட பின்னர், அவர்கள் மீட்கப்பட்டனர். முழங்கால் அளவு மட்டுமே முதலில் இருந்த வெள்ளப்பெருக்கு, அடுத்த 15 நிமிடத்தில் இடுப்பளவு வந்திருந்தது.
ஹார்வி புயல் தற்போது வெப்பமண்ட தாழ்வழுத்தமாக தரங்குறைந்துள்ளது. ஆனாலும், அடுத்த இரண்டு நாட்கள் லூசியானாவில் இருந்து கென்டகி வரை கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெக்ஸாஸின் தென் கிழக்கிலும், தென் மேற்கு லூசியானாவிலும் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Adrees Latif/reuters

படக்குறிப்பு, ஹார்வி புயல் தற்போது வெப்பமண்டலத் தாழ்வழுத்தமாக குறைந்துள்ளது. ஆனாலும், அடுத்த இரண்டு நாட்கள் லூசியானாவில் இருந்து கென்டகி வரை கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் கிழக்கு டெக்ஸாசிலும் தென் மேற்கு லூசியானாவிலும் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வணிக தலைநகரான மும்பையில் பெய்த பருவமழையால் இடுப்பளவுக்கு தண்ணீர் பெருகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த செவ்வாய்கிழமை விமான பயணங்கள், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

பட மூலாதாரம், PUNIT PARANJPE/afp

படக்குறிப்பு, இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பையில் பெய்த பருவமழையால் இடுப்பளவுக்கு தண்ணீர் பெருகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த செவ்வாய்கிழமை விமானப் பயணங்கள், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
சூடான் மக்கள் விடுதலை படைக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள், உகாண்டாவுக்கும், தெற்கு சூடானுக்கும் எல்லையில் இருக்கின்ற கயா நகரில் அரச படைக்கு எதிராக ஆயுதத் தாக்குதல் நடத்தினர்.

பட மூலாதாரம், Goran Tomasevic/REUTERS

படக்குறிப்பு, சூடான் கிளர்ச்சிப் படையினர், உகாண்டா மற்றும் தெற்கு சூடான் எல்லையில் இருக்கின்ற கயா நகரில் அரச படைக்கு எதிராக ஆயுதத் தாக்குதல் நடத்தினர்.

சூடான் மக்கள் விடுதலை படைக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள், உகாண்டாவுக்கும், தெற்கு சூடானுக்கும் எல்லையில் இருக்கின்ற கயா நகரில் அரச படைக்கு எதிராக ஆயுதத் தாக்குதல் நடத்தினர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :