மும்பையில் 12 ஆண்டுகளில் இல்லாத கனமழை (புகைப்படத் தொகுப்பு)

மும்பையில் பெய்துவரும் கனமழை தொடர்பான புகைப்படங்களைத் தொகுத்து வழங்குகிறார் பிபிசி மராத்தி சேவையைச் சேர்ந்த மயுரேஷ் குன்னூர்.

மும்பையில் சுமார் 20 வருடங்களில் இல்லாத அளவிற்கு கனமழை (புகைப்படத் தொகுப்பு)
படக்குறிப்பு, மும்பை நகர் முழுவதும் பெய்துவரும் கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையின் முக்கிய போக்குவரத்து அம்சமாக கருதப்படும் உள்ளூர் ரயில்கள் நிறுப்பத்தப்பட்டுள்ளன. சாலைகளில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலில் கார்கள் சிக்கி நிற்கின்றன.
இந்த மழை கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து பெய்த மழையில் இதுவே அதிகபட்சம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.நகர வாசிகள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அறிவிறுத்தப்பட்டுள்ளனர். பணிகளுக்குச் சென்றவர்கள் வீட்டிற்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
படக்குறிப்பு, 2005ஆம் ஆண்டிலிருந்து பெய்த மழையில் இதுவே அதிகபட்சம் என அதிகாரிகள் நம்புகின்றனர். நகர வாசிகள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அறிவிறுத்தப்பட்டுள்ளனர். பணிகளுக்குச் சென்றவர்கள் வீட்டிற்குச் செல்ல முடியாமல் தவித்து நிற்கின்றனர்.
சமூக ஊடகங்கள் மூலம் மக்கள் உதவ முன்வந்துள்ளனர். மழையில் தவிர்ப்பவர்களுக்கு உதவ #Rainhosts என்ற ஷாட்டாகில் உதவி வருகின்றனர்.
படக்குறிப்பு, சமூக ஊடகங்கள் மூலம் மக்கள் உதவ முன்வந்துள்ளனர். மழையில் தவிர்ப்பவர்களுக்கு இருப்பிடங்களை வழங்க #Rainhosts என்ற ஹாஷ்டாகை பயன்படுத்தி வருகின்றனர்.
மும்பையில் சுமார் 20 வருடங்களில் இல்லாத அளவிற்கு கனமழை (புகைப்படத் தொகுப்பு)
படக்குறிப்பு, நகரம் முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது; மேலும் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மும்பை விமான நிலைய செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மும்பையின் வெள்ளம் சூழ்ந்த மார்க்கெட் பகுதி ஒன்று.
படக்குறிப்பு, தேசியப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த மூன்று அணிகள் உஷார் நிலையில் இருப்பதாகவும், நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.