நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள புகைப்படத் திருவிழா

நியூ யார்க் நகரில் நடைபெற்ற புரூக்ளின் போட்டோவில் புகைப்படத் திருவிழாவில் 75-க்கும் அதிகமான புகைப்படக் கலைஞர்கள் தங்கள் படைப்புகளைப் பார்வைக்கு வைத்திருந்தனர். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

உடல் பருமனுடைய இளம் பெண்

பட மூலாதாரம், Abbie Trayler-Smith

படக்குறிப்பு, அப்பி டிரைலர் - ஸ்மித்தின் இளம் வயது உடல் பருமன் குறித்த புகைப்படத்தின் ஒரு படம் இது. ஒல்லியாக இருப்பதே அழகு என்று நினைக்கும் சமூகத்தில் பருமன் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களை அவரது புகைப்படங்கள் விளக்குகின்றன.
ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கும் பனிக் கரடிகள்

பட மூலாதாரம், Josh Haner

படக்குறிப்பு, புரூக்ளின் பாலத்தின் கீழே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கப்பல் சரக்கு பெட்டகங்களில் இந்தப் புகைப்படக் கண்காட்சி நடைபெறும். பருவநிலை மாற்றத்தால் அலாஸ்காவில் பணி உருகி வருவதால், தங்கள் வாழ்விடங்களை இழந்து ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கும் பனிக் கரடிகள் இருப்பதைக் காட்டும் ஜோஷ் ஹேனர் எடுத்த படம்.
புகைப்படத்துடன் குழந்தை

பட மூலாதாரம், Lynn Johnson

படக்குறிப்பு, நேஷனல் ஜாகரஃபி இதழின் 'பாலின புரட்சி' பதிப்பிற்கு லின் ஜான்சன் எடுத்த படங்களில் ஒன்று. பெண் புகைப்படக் கலைஞரான அவர் அமெரிக்கா, ஜமைக்கா, டோமினிக் குடியரசு மற்றும் சமோவா ஆகிய நாடுகளில் தங்கள் பாலின அடையாளங்களை பகிர்ந்து கொண்டவர்களை படமாக்கினார்.
ஒரு வெனிசுவேல குடும்பம்.

பட மூலாதாரம், Meridith Kohut

படக்குறிப்பு, காலியாக உள்ள தங்கள் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியின் அருகில் இருக்கும் ஒரு வெனிசுவேல குடும்பம். அந்நாட்டை பாதித்துள்ள மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியை மெரிடித் கொஹுட் தன் படங்கள் மூலம் பதிவு செய்கிறார்.
பணியில் சேரும் கருப்பினப் பெண்களை

பட மூலாதாரம், Endia Beal

படக்குறிப்பு, கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியேறி பணியில் சேரும் கருப்பினப் பெண்களையும், அவர்கள் பெருநிறுவங்களின் பணிச் சூழலில் தங்களை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் எண்டியா பீலின் புகைப்படங்கள் விளக்குகின்றன.
லைபீரியாவில் உள்ள பெண்கள்

பட மூலாதாரம், Yagazie Emezi

படக்குறிப்பு, யாகாஸீ எமெஸீ லைபீரியாவில் உள்ள பெண்கள் தங்கள் உடலைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்தார். அவரிடம் 19 வயது எமிலி, "இந்த உடலைக் கொடுத்ததற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். முதலில் உங்களை நீங்களே நேசிக்க வேண்டும். பிறரைக் குறை கூறுவதற்கு முன் உங்களைப்பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும்," என்று கூறினார்.
படங்கள் அங்குள்ள பெண் தொழில் முனைவோரைக் கொண்டாடுகின்றன.

பட மூலாதாரம், Sylvain Cherkaoui

படக்குறிப்பு, சில்வியன் செர்க்காவோய் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெண்களைப் படம் பிடித்தார். கலாசார கட்டுப்பாடுகள், பாகுபாடு காட்டும் சட்டங்கள் மற்றும் ஊதிய பாகுபாடுகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண்கள், அக்கண்டத்தின் வளர்ச்சியை அதிகரிக்க முக்கியமானவர்கள் என்கிறார் அவர். இந்தப் பெண் புகைப்படக் கலைஞரின் படங்கள் அங்குள்ள பெண் தொழில் முனைவோரைக் கொண்டாடுகின்றன.
'லாஸ்ட் ரோல்ஸ் அமெரிக்கா' திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்டது

பட மூலாதாரம், Lost Rolls America

படக்குறிப்பு, எடுத்தவரின் பெயர் குறிப்பிடப்படாத இந்தப் படம் பழைய புகைப்படச் சுருள்களை சேகரிக்கும் 'லாஸ்ட் ரோல்ஸ் அமெரிக்கா' திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்டது. போட்டோவில் புகைப்படத் திருவிழா புரூக்ளின் பிரிட்ஜ் பூங்காவில் வரும் செப்டம்பர் 13 முதல் 24 வரை நடக்கவுள்ளது.