தங்க கழிவறை: விசித்திர பொருட்களால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள்

அமெரிக்க அருங்காட்சியகத்திற்கு செல்கின்ற பார்வையாளர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு காட்சிப்பொருளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதுதான் தங்க கழிவறை. ஒரு பவுண்ட் செலவிட்டு மக்கள் இதனை பயன்படுத்தலாம்.

தங்கத்தாலான கழிவறை

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தங்கத்தால் செய்யப்பட்ட இந்த கழிவறை கலைப்பொருள், ஒரு மில்லியன் பவுண்ட் மதிப்புள்ளது. இத்தாலிய கலைஞரால் வடிவமைக்கப்பட்ட இது நியூயார்க்கிலுள்ள குகென்ஹைய்ம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சாதாரண கழிவறை போலவே இது செயல்படுகிறது. ஒரு பென்னி செலவிட்டு ஒரு லட்சத்துக்கு மேலானோர் இதனை பார்த்துள்ளனர்.
ஆரெஞ்சு மற்றும் எலுமிச்சை பழங்களாலான கலைப்பொருள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தப் புகைப்பட தொகுப்பில் வருகின்ற சாப்பிடும் பழங்களால் செய்யப்பட்ட ஒரேயொரு கலைப்பொருள் இதுதான். ஆரெஞ்சு மற்றும் எலுமிச்சை பழங்களால் இது செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸிலுள்ள மாங்டோங் நகரத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் எலுமிச்சை விழா ஒன்றின்போது, இடம்பெற்ற தலைசிறந்த கலைப்பொருள் இது.
பென்சில் முனையில் சிற்பம்

பட மூலாதாரம், CHIEN CHU LEE

படக்குறிப்பு, “முடிவில்லாதது மற்றும் அதற்கு அப்பால்!” உண்மையிலேயே பெரியவற்றிலிருந்து சிறியவற்றிற்கு. தைவானை சேர்ந்த கலைஞர் சியன் ச்சு லீ பென்சிலின் உள்ளிருக்கும் கரி பொருளில் இருந்து, ஆச்சரியமூட்டும் இந்த சிறிய வடிவ கலைப்பொருட்களை செய்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், பென்சில் கரி முனையில் இதனை செய்கிறார். அவரது மிகவும் சிறிய கலைப்பொருட்கள் 0.1 மில்லிமீட்டர் நீளமுடையதாக இருக்கின்றன. இதனை முடிக்க பல மணிநேரங்கள் ஆகலாம். இவற்றை செய்வதற்கு அதிக பொறுமையும். நடுக்கமற்ற நிலையான கரங்களும் தேவை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
பனி சிற்பங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பனி உங்களுடன் இருக்கட்டும்.. ஜப்பானில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற சப்போரோ பனி விழாவில் உருவாக்கப்பட்ட நட்சத்திர போர் கருப்பொருளிலான பெரிய கலைசிற்பங்கள் இவை. இப்போது 67ஆவது ஆண்டாக இந்தப் பனி விழா நடைபெறுகிறது, இந்த ஆண்டு 250 வேறுபட்ட கலைசிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன. உள்ளூர் பூங்கா ஒன்றில் உயர் பள்ளி மாணவர்கள், சில பனி சிலைகளை செய்தபோது, 1950 ஆம் ஆண்டு இந்த பனி சிற்ப விழா தொடங்கியது.
காகித சிற்பம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீன சிற்பக்கலைஞர் லி ஹொங்போ உருவாக்கிய இந்த சிற்பத்தை பார்க்கும்போது, முதலில் அது பிளாஸ்டரால் செய்யப்பட்டதாக தோன்றினாலும், உண்மையில் இது காகிதத்தால் செய்யப்பட்டுள்ளது. காகித அடுக்குகளை பசையால் ஒட்டி ஒன்றாக இணைத்து, பின்னர் வெட்டி, வடித்து, அவர் விரும்பிய வடிவத்திற்கு உருவாக்கியுள்ளார்,
கடற்கரை கழிவுகளால் செய்யப்பட்ட சிற்பம்

பட மூலாதாரம், Andy Cross

படக்குறிப்பு, அமெரிக்காவின் கடற்கரைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து இந்த சிற்பம் செய்யப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டிலிருந்து பெண் சிற்பக்கலைஞரான ஏஞ்சலோ போஸ்ஸி கடல்வாழ் உயிரினங்களின் சிற்பங்களை உருவாக்கி வருகிறார். இந்த முயற்சி மாசுபாடு பற்றியும், அது சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றியும் மக்களுக்கு அதிகம் கற்பிக்கும் என்று அவர் நம்புகிறார்.
பிளாஸ்டிக் கட்டைகளை அடுக்கி செய்யப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இது பறவையா அல்லது விமானமா? இல்லை. முழுவதும் பிளாஸ்டிக் கட்டைகளை அடுக்கி (லெகோ) சிற்பக்கலைஞர் நாதன் சவாயா உருவாக்கிய சிற்பமாகும். பிளாஸ்டிக் கட்டைகளை அடுக்கி கலைப்பொருட்களை உருவாக்குவதில் நாதன் பிரபலமானவர். டைனோசரின் கவரக்கூடிய இந்த தோற்றம், பிளாஸ்டிக் கட்டைகளை அடுக்கி உருவாக்கப்பட்ட கலைப்பொருட்களின் கண்காட்சியில் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மணல் சிற்பம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “ந-ந-ந-ந-ந மணல் மனிதர்!!” இந்த சிற்பம் நீங்கள் ஊகிப்பதுபோல மணலால் செய்யப்பட்டதுதான், இங்கிலாந்தின் மேற்கு கடற்கரையோரத்தில் இருக்கின்ற வெஸ்டன்-சூப்பர் மாரெயில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற விழாவிற்காக உருவாக்கப்பட்டது. இந்த சிற்பங்களை உருவாக்க சுமார் 4 ஆயிரம் டன் கடற்கரை மணல் கொண்டு வரப்பட்டது. இந்த சிற்பம் 2013 ஆம் ஆண்டு ஹோலிவுட் சிறப்பு காட்சியின் ஒரு பகுதியாக இருந்தது.
மலத்தால் செய்யப்பட்ட சிற்பம்

பட மூலாதாரம், SAKHALIFE.RU

படக்குறிப்பு, இறுதியாக, உங்களுடைய மூக்கை பிடித்துகொள்ளுங்கள். காரணம் ரஷ்ய விவசாயி ஒருவர் இந்த பெரிய சிற்பத்தை மலத்தை கொண்டு வடித்திருக்கிறார். ஒவ்வொரு சீனப் புத்தாண்டுக்கும் கலைஞர் மிகையில் போப்போசோஃப் ஒரு சிற்பத்தை உருவாக்குவார். நீங்கள் பார்ப்பதைபோல, இந்த ஆண்டு சேவல் ஆண்டு என்பதால், பெரிய சேவல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.