ஹ்யூஸ்டன்: தொழிற்சாலை வெடித்து ரசாயனங்கள் வளிமண்டலத்தில் கலப்பு
புயலால் பாதிக்கப்பட்ட அமெரிக்க நகரான ஹ்யூஸ்டனில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்துள்ள தொழிற்சாலையில் இருந்து ரசாயனங்கள் வளிமண்டலத்தில் கலந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, குரோஸ்பையிலுள்ள அர்கெமா தொழிற்சாலையில் இருந்து வெடி சத்தம் இரண்டு முறை கேட்டதாகவும், கறுப்புப் புகை வெளிவருவதாகவும் அவசர கால சேவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஹார்வே சூறாவளியால் கனமழை பெய்தபோது, குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டிய வசதிகளுக்கு வழங்கக்கூடிய குளிரூட்டும் திறனை இந்த வளாகம் இழந்திருந்தது.
இந்த வெடி விபத்து ஏற்படுவதை தடுக்க வழி எதுவுமில்லை என்று அந்த நிறுவனம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த வெடிப்புகளுக்கு முன்னர். இந்த இடத்தை பாதுகாக்க உதவிய காவல்துறை அதிகாரி நச்சுக் காற்றை சுவாசித்ததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பிறர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏறக்குறைய சிடிடி (CDT) நேரப்படி, டெக்ஸாஸின் குரோஸ்பையிலுள்ள தொழிற்சாலையில் இரண்டு முறை வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும், கறுப்புப் புகை வெளிவருவதாகவும் ஹாரிஸ் வட்டார அவசரகால சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
நிலைமையை கண்காணித்து வந்த உள்ளூர் அதிகாரிகள் இந்த தொழிற்சாலையின் ஒன்றரை மைல் சுற்றுவட்ட பகுதியில் மக்கள் வெளியேற வேண்டிய மண்டலம் ஒன்றை ஏற்கெனவே உருவாக்கி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
டெக்ஸாஸின் கிழக்கில் வீசிய இந்தப் புயலுக்கு பின்னர், குறைந்தது 33 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்க தேசிய வானிலை சேவை இப்போது இந்த புயலை வெப்பமண்டல தாழ்வழுத்தமாக தரங்குறைத்து அறிவித்துள்ளது.
சூறைக்காற்று தாக்கிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு
பிற செய்திகள்
- மதுரையில் நீலத் திமிங்கல கணினி விளையாட்டுக்கு ஒருவர் பலி
- டயானா- ' மக்கள் இளவரசி' மறைந்து 20 ஆண்டுகள் ( புகைப்படத் தொகுப்பு)
- மாதவிடாய் குறித்து ஆசிரியை கடிந்ததால் மாணவி தற்கொலை?
- மூன்று பேர் மட்டுமே பேசும் பூர்வீக ஆப்ரிக்க மொழியை காப்பாற்ற முயற்சி
- வடகொரியா அச்சுறுத்தல்: ஜப்பான் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும்?
- 'இது ஆரம்பம்தான்': ஜப்பான் மீது பறந்த ஏவுகணை பற்றி வட கொரியா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













