குழந்தை திருமணங்களுக்கு ஃபத்வா ; இஸ்லாமிய பெண் மதகுருக்கள் அதிரடி

பட மூலாதாரம், BBC INDONESIA
இந்தோனீஷியாவில் உள்ள இஸ்லாமிய பெண் மதகுருக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் குழந்தை திருமணத்திற்கு எதிராக ஃபத்வா என்ற மத ரீதியான ஆணையைப் பிறப்பித்துள்ளனர்.
இந்த ஃபத்வா சட்டப்படி செல்லுபடியாகாது ஆ,னால் செல்வாக்குமிக்க உத்தரவாக இருக்கும்.
இந்தோனீஷியாவில் பெண் மதகுருக்கள் கலந்து கொண்ட மூன்று நாள் மாநாட்டு ஒன்றை தொடர்ந்து இந்த ஃபத்வா பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் சட்டப்பூர்வ வயதை தற்போது நடைமுறையில் இருக்கும் 16 வயதிலிருந்து 18 ஆக அதிகரிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் மதகுருக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரும்பான்மை முஸ்லிம்கள் வசிக்கும் நாடாக இந்தோனீஷியா உள்ளது.
மேலும், உலகளவில் பெண் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறும் நாடுகளில் இந்தோனீஷியாவும் உள்ளது.
இந்தோனீஷியாவில் வசிக்கும் நான்கில் ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்குள்ளாக திருமணம் நடைபெறுவதாக ஐ.நா வின் குழந்தைகள் நல அலுவலகமான யுனிசெஃப் கூறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












