பயணத்தடை உத்தரவால் தடுக்கப்பட்ட பயணிகளை விமானத்தில் ஏற்றலாம் : அமெரிக்க சுங்க முகமை உத்தரவு
அமெரிக்காவிற்குள் வருவதற்காக விமானத்தில் ஏற இருந்த ஏழு முஸ்லிம் நாடுகளை சேர்ந்த பயணிகள் அதிபரின் பயணத்தடை உத்தரவு காரணமாக தடுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த பயணிகளை விமானத்திற்குள் அனுமதிக்குமாறு அமெரிக்க சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
பயணிகளை விமானத்தில் உடனடியாக ஏற்றும் நடவடிக்கையை தொடங்குவதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒரு மதத்துக்கு ஆதரவாக இன்னொரு மதத்துக்கு சாதகமாக நடப்பது அமெரிக்க அரசியல் சட்டப்படி குற்றம் என்பதால், அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு தாற்காலிக தடை விதிப்பதாக மத்திய நீதிபதி ஒருவர் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதியின் தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அரசு தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












