டிரம்பின் நிர்வாக ஆணைக்கு நியூ யார்க் அருங்காட்சியகத்தின் நூதன எதிர்ப்பு
மேற்குலக கலைப்படைப்புக்களை மாற்றிவிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணத்தடை விதித்துள்ள நாடுகளின் கலைப்படைப்புக்களை அவ்விடத்தில் வைத்து நியூ யார்க்கிலுள்ள புகழ்பெற்ற நவீன கலை அருங்காட்சியகம் ஒன்று டிரம்பின் நிர்வாக ஆணைக்கு தன்னுடைய எதிர்ப்பை காட்டியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பிக்காசோ, மேட்டீஸ் மற்றும் பிற மேற்குலக ஓவியக்கலைஞர்களின் நிரந்தர ஓவிய சேகரிப்புக்களின் பல படைப்புக்களை எடுத்துவிட்டதாக அந்த அருங்காட்சியகம் கூறியுள்ளது.
அவை இருந்த இடங்களில் அமெரிக்காவில் வாழுகின்ற காணொளி கலைஞர் தலா மதானி உள்பட 5 இரானியக் கலைஞர்களின் படைப்புகள், இராக்கில் பிறந்த கட்டடக் கலைஞரான ஸஹா ஹாடிட், சூடானிய ஓவியர் இப்ராஹிம் எல்-சலாஹி ஆகியோரின் படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவுக்கு உள்ளதைபோல வரவேற்பு கொள்கைகளும், சுதந்திரமும் அருங்காட்சியகத்திற்கும் மிகவும் முக்கியமானவை என்பதை உறுதி செய்யும் நோக்கத்தை விவரிக்கும் குறிப்பு ஒன்று ஒவ்வொரு கலைப்படைப்பின் அருகிலும் வைக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












