இஸ்லாமிய அரசு குழுவின் பரப்புரையில் வீழ்ச்சி
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவால் மேற்கொள்ளப்படும் பரப்புரையின் அளவில் சரிவு ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.

பட மூலாதாரம், AFP
ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஐ.எஸ். ஊடக விவரங்களின் எண்ணிக்கையில் ஒரு செங்குத்து வீழ்ச்சி காணப்படுவதாக வெஸ்ட் பாயின்டிலுள்ள அமெரிக்க ராணுவ கல்வி நிலையத்தால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
அபு முகமது அல்-ஃபுர்கான் என்று அறியப்படும் ஐ.எஸின் பரப்புரை தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக இந்த ஜிகாதி குழு உறுதி செய்திருக்கிறது.
ஐ.எஸ். குழுவின் தளபதிகள் இருக்கின்ற சிரியாவின் ராக்கா நகருக்கு அருகில் நடத்தப்பட்ட ஒரு துல்லிய தாக்குதலில், அல்-ஃபுர்கான் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் கடந்த மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.








