நிகாப், புர்கா அணிய பல்கேரிய நாடாளுமன்றம் தடை

பொது இடங்களில் முகத்தை மூடி கொள்ளும் துணிகள் அணிவதை பல்கேரிய நாடாளுமன்றம் தடை செய்திருக்கிறது.

முஸ்லீம் பெண்களின் முகத்திரை ஆடைக்குத் தடை

பட மூலாதாரம், Mariya Petkova

படக்குறிப்பு, ஏழு மில்லியன் மக்கள் தொகை கொண்ட பல்கேரியாவில், கிட்டதட்ட 10 சதவீதமே உள்ள முஸ்லீம்களால் இது பாரம்பரிய ஆடையாக கருதப்படவில்லை

வலது சாரி கூட்டணி கட்சியான நாட்டுப்பற்றாளர் முன்னணி கடந்த ஜூன் மாதம் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியது.

கண்களை மட்டுமே வெளிகாட்டும் நிகாப், அல்லது முகம் முழுவதையும் மூடிவிடும் புர்கா போன்ற முகத்தை மூடிக் கொள்ளும் இஸ்லாமியரின் ஆடைகளை தடை செய்வதாக இந்த சட்டம் குறிப்பிடுகிறது.

நிகாப், அல்லது புர்கா போன்ற முகத்தை மூடி கொள்ளும் இஸ்லாமியரின் ஆடைகளுக்கு தடை

பட மூலாதாரம், Nikolay Doychinov/AFP

படக்குறிப்பு, நிகாப், அல்லது புர்கா போன்ற முகத்தை மூடி கொள்ளும் இஸ்லாமியரின் ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

ஏழு மில்லியன் மக்கள்தொகை கொண்ட பல்கேரியாவில், கிட்டதட்ட 10 சதவீதமே உள்ள முஸ்லீம்களால் இது பாரம்பரிய ஆடையாக கருதப்படவில்லை.

நாட்டின் தெற்கு பகுதி நகரான பஸார்ட்ஜிக்கில், ரோமா சமூகத்தின் சிறிய முஸ்லீம் குழு ஒன்றின் ஏறக்குறைய இரண்டு டஜன் பெண்களால் மட்டுமே நிகாப் அணியப்படுகிறது.

பிரான்ஸூம், பெல்ஜியமும் முகத்தை மூடி கொள்ளும் ஆடைகளை ஏற்கெனவே தடை செய்திருக்கின்றன.