பிரியங்கா சோப்ரா நிக் ஜோனாசை விட்டு பிரிகிறாரா? நெட்டிசன்களின் சந்தேகம் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், @priyankachopr
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தமது சமூக ஊடக கணக்கில் தமது பெயருடன் சேர்க்கப்பட்டிருந்த கணவர் நிக் ஜோனாசின் பெயரை நீக்கியிருப்பது, அவர் விவாகரத்துக்கு தயாராகி வருவதாக ஓர் சந்தேகத்தை சமூக ஊடகங்களில் எழுப்பியிருக்கிறது.
பிரியங்காவின் இந்த செயல், சமூக ஊடகங்களில் டிரெண்டாகும் பட்டியலில் அவரது பெயரை சில மணி நேரம் இடம்பெற வைத்தது.
இன்று காலையில் தமது இன்ஸ்டாகிராம் கணக்கில் இடம்பெற்ற தமது அழைப்புப் பெயரில் இருந்த கணவர் நிக் ஜோனாசை திடீரென நீக்கி விட்டு 'பிரியங்கா சோப்ரா' என்று மட்டும் அவர் வைத்துக் கொண்டார்.
இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் "என்ன உங்களுக்கு விவாகரத்து ஆகி விட்டதா?" என்று கேள்வி எழுப்பினர். சிலர் அதை ஒரு சந்தேகமாகவே எழுப்பி இடுகைகளை பதிவு செய்திருந்தனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1

X பதிவின் முடிவு, 2

X பதிவின் முடிவு, 3
இதே வேளை, கணவர் நிக் ஜோனாஸ் இரவு உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை, தனது இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கங்களில் பதிவிட்டார்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
அதற்கு பதில் பதிவிட்ட பிரியங்கா சோப்ரா ("Damn! I just died in your arms...") உன்னிடத்தில் என்னை தொலைத்து விட்டேன் என காதல் ரசம் சொட்டும் எமோஜி போட்டு கமென்ட் செய்துள்ளார்.

பட மூலாதாரம், Priyanka Chopra
ஆனாலும், திருப்தியடையாத பல பிரியங்காவின் ரசிகர்கள் மற்றும் அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடருவோர், கணவர் பெயர் நீக்கத்தை பல விதங்களில் பொருள்படுத்தி கேள்விகளை எழுப்பினர்.
மறுபுறம் இந்த விவகாரம், பாலிவுட் செய்திகளை அதிகளவில் ஒளிபரப்பும் வட மாநில தனியார் தொலைக்காட்சிகளிலும் விவாதப்பொருளாயின.
ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிருபர் பிரியங்காவின் தாய் மதுவிடம் இது பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் "அவை வீண் தகவல்கள், அவற்றை எல்லாம் நம்பாதீர்கள்," என்று கூறினார்.
பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை…
2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா, 2002இல் தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல இந்திப் படங்கள் மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகையானார். பாலிவுட் திரையுலகில் தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ள அவர், ஹாலிவுட் பட உலகில் நுழையும் முன்பாக, குவான்டிகோ என்ற அமெரிக்க டி.வி தொடரில் நடித்து உலக அளவில் பிரபலமானார்.
பே வாட்ச், எ கிட் லைக் ஜேக், போன்ற படங்கள் மூலம் ஹாலிவுட்டிலும் கால் பதித்து வெற்றிகரமாக வலம் வருகிறார் .
விவாகரத்து வதந்தி முதல் முறை அல்ல...

பட மூலாதாரம், @priyankachopra
2018ஆம் ஆண்டு, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனாசை காதல் திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா சோப்ரா. திருமணம் முடிந்த மூன்று மாதங்களிலேயே, இருவருக்கும் கருத்து வேறுபாடு என்றும் விவாகரத்துக்கு தயாராகி வருகிறார்கள் என்றும் வதந்திகள் பரவின. அதற்கு தனது செய்தித் தொடர்பாளர் மூலம் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று விளக்கமளித்தார் பிரியங்கா.
இந்த நிலையில், தற்போது மீண்டும் நிக் ஜோனாசை அவர் விவாகரத்து செய்ய ஆயத்தமாகி வருவதாக வதந்தி பரவியிருக்கிறது.
உலகளவில் பிரபலமான கீனு ரீவ்ஸின் மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ரா, அந்த படத்தின் வெளியீடு தொடர்பான பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில், கணவர் பெயரை நீக்கிய விவகாரத்தில் உரிய விளக்கத்தை அவர் தருவாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் இடையே மேலோங்கியிருக்கிறது.
பிற செய்திகள்:
- குழந்தை வளர்ப்பு மன அழுத்தம் தருகிறதா? பரிணாமவியல் சொல்வது என்ன?
- தமிழ்நாடு: சிறார்களைப் பயன்படுத்தும் குற்றக் குழுக்கள்: - `மாஸ்டர்' படம் சொல்வது உண்மையில் நடக்கிறதா?
- "தடுப்பூசி செலுத்திக் கொள்வோம் இல்லை இறந்து போவோம்": ஜெர்மனி சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
- ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி: 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பால்வெளி வரை பார்க்கலாம்
- பாலியல் புகார் கூறிய சீன டென்னிஸ் வீராங்கனைக்கு நடந்தது என்ன?
- ஹாரி பாட்டர் படத்துக்கு 20 வயது: நடிகர்கள் என்ன செய்கின்றனர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்