Anandha Kannan மறைவு - பிரபல டிவி தொகுப்பாளருக்கு என்ன நடந்தது?

ஆனந்தக் கண்ணன்

பட மூலாதாரம், Twitter

பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்தக்கண்ணன் இறந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு வயது 48.

சிங்கப்பூரை சேர்ந்த தமிழரான இவர் சன் மியூசிக், SS மியூசிக் உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக பார்வையாளர்கள் மத்தியில் வெகு பிரசித்தம். தொலைக்காட்சி மட்டுமல்லாமல், 'சிந்துபாத்' சீரியல், 'சரோஜா', 'அதிசய உலகம்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

Bile Duct Cancer என்ற புற்றுநோய் பாதிப்புக்கு அவர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்பட்ட நிலையில், நேற்று (ஆகஸ்ட் 16) இரவு அவர் காலமாகியிருக்கிறார். அவர் இறந்த செய்தியை இயக்குநரும், அவரது நண்பருமான வெங்கட்பிரபு தமது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

சிங்கப்பூரில் வசித்து வந்தவர் தனது மனைவி ராணியின் படிப்பிற்காக சென்னை வந்திருக்கிறார். அதன் பின்பே நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்ற ஆரம்பித்து இருக்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனை ஒரு பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் ஆனந்த கண்ணன்.

ஆனந்தக் கண்ணன்

பட மூலாதாரம், Twitter

பின்பு, தொலைக்காட்சியில் இருந்து விலகி ஆர்ஜே, பகுதி நேர விஜேவாகவும் பணிபுரிந்தார். சிங்கப்பூரில் இருந்த போதே அங்கிருந்த பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக இருந்தார். சன் டிவியில் பணிபுரிந்த காலத்தில் விஜய், சூர்யா, அசின் என பல முன்னணி நட்சத்திரங்களை பேட்டி எடுத்துள்ளார். இவரது கலகலப்பான பேச்சுக்கும், சிரித்த முகத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

பின்பு 2011ம் வருடத்திற்கு பிறகு மீண்டும் சிங்கப்பூரில் குடியேறிய அவர் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு டிஸ்கவரி தமிழில் ஒளிபரப்பான 'சுவை' எனும் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

X பதிவை கடந்து செல்ல, 3

X பதிவின் முடிவு, 3

நண்பர்கள் உருக்கம்

ஆனந்தக்கண்ணனின் திடீர் மறைவு அவரது ரசிகர்களை வருத்தத்திற்குள்ளாக்கியுள்ளது. அவரது நண்பரும் நடிகையுமான காஜல் பசுபதி அவருடன் பல நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றியவர். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இது சரியானதல்ல கண்ணா என ட்வீட் செய்திருக்கிறார்.

ஆனந்தக்கண்ணனுடனான நினைவுகளை பகிர்ந்து கொள்ள, பிபிசி தமிழுக்காக காஜலை தொடர்பு கொண்டோம்.

ஆனந்தக்கண்ணன்
படக்குறிப்பு, ஆனந்தக்கண்ணனுடன் காஜல் பசுபதி

"இயக்குநர் வெங்கட்பிரபுவின் ட்வீட் பார்த்துதான் எனக்கே இது குறித்து தெரிய வந்தது. அதன் பின்பு எங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் இதை உறுதி செய்தபோது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதன் பின்பு ஆனந்தக்கண்ணனின் தொலைபேசிக்கு அழைத்தேன். அவரது குடும்பத்தாரையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன், முடியவில்லை. தொலைக்காட்சியில் வேலை செய்த காலத்தில் இருந்தெந் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். வேலை சார்ந்த விஷயம் என்பதையும் தாண்டி, நிறைய தனிப்பட்ட விஷயங்களும் பகிர்ந்து கொள்வோம். தொலைக்காட்சியை விட்டு விலகி, அவர் சிங்கப்பூரில் பிசினஸ் செய்து வந்தார். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தெரிந்து எனக்கு வாழ்த்து அனுப்பியிருந்தார்.

அவர் பிரபலமாக இருந்த காலத்தில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அதே சமயத்தில் அவரது தோற்றம், உடை, பேச்சு இதெல்லாம் வைத்து அவர் திமிர் பிடித்தவர் என்றெல்லாம் பலர் நினைத்திருக்கின்றனர். அப்படி நிறைய கடிதங்களும் அவருக்கு வந்திருந்தது. ஆனால், நிஜமாலும் மேலே சொன்னதுக்கெல்லாம் நேர் எதிராக மிகவும் தன்மையானவர். அவர் இப்போது இல்லாமல் இருப்பது எதிர்பாராத ஒன்று. நல்ல செய்தியாக இருந்தால் நாலு பேரிடம் இது குறித்து பேசலாம். ஆனால், காலையில் இருந்து இது குறித்தான தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகளால் நான் மிகவும் மன அழுத்தத்தில் உள்ளேன். இதுகுறித்து நான் மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை" என்பதோடு முடித்து கொண்டார் காஜல் பசுபதி.

இவரது மரண செய்தி அறிந்து ரசிகர்கள் பலரும் அவரது சிரித்த முகத்தையும், அவரது ஆரம்ப கால தொலைக்காட்சி பயணத்தில் தங்களது நினைவுகளையும் சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :